டெல்லி: விபிஎஃப் எனப்படும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு கூடிய விரைவில் மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வழங்க இருக்கிறது. இந்த தன்னார்வ வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் தன்னார்வ வருங்கால வைப்பு நிதியில் செய்யும் முதலீட்டில் வரி இல்லாத வட்டி வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக தற்போது இருக்கிறது. இது உயர்த்தப்படலாம் என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது.

தற்போது ஊழியர்கள் இந்த தன்னார்வ வருங்கால வைப்பு நிதியில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் முதலீட்டில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. தற்போது இந்த 2.5 லட்சம் ரூபாய் என்ற வரம்பினை உயர்த்துவது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
தன்னார்வ வருங்கால வைப்பு நிதி என்பது பிஎஃபில் ஊழியர்களுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை இல்லாமல் அவர்களும் தங்களின் எதிர்காலத்தை கருதி கூடுதலாக தொகையை முதலீடு செய்யலாம். குறைந்த ஆபத்து கொண்ட ஒரு முதலீட்டு கருவி இது ஆகும்.
2026 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் விவாதத்தின் போது இந்த விவகாரத்தை நிதி அமைச்சகத்திடம் கொண்டு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் குறைந்த ஊதியம் வாங்கும் நபர்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு இந்த அறிவிப்பினை வெளியிடக்கூடும்.
ஈபிஎஃப் சந்தாதாரர்கள் எதிர்காலத்தில் ஓய்வு பெறும்போது போதுமான பணம் கையில் இருக்கும் வகையில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. அதிக ஊதியம் வாங்குபவர்கள் வரி பிடித்தங்களில் இருந்து தப்பிக்க தன்னார்வ வருங்கால வைப்பு நிதி கணக்கில் அதிக தொகையை டெபாசிட் செய்து வந்தனர்.
எனவே தான் மத்திய அரசு இதற்கென ஒரு வரம்பை கொண்டு வந்து அந்த வரம்பிற்கு மேல் செய்யப்படும் முதலீட்டில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்தது.
இந்த தன்னார்வ வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடு, அதில் கிடைக்கும் வட்டி, கிடைக்கும் முதிர்வு தொகை என அனைத்துமே வரி இல்லாததாக மாற இருக்கிறது என சொல்லப்படுகிறது . இந்தியாவில் ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியில் நடப்பு ஆண்டு முதல் 8.25% வட்டி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஈபிஎஃப்ஓ-இல் சுமார் 70 மில்லியன் மாதாந்திர பங்களிப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 7.5 மில்லியன் பேர் ஓய்வூதியதாரர்களாகவும் அவர்களின் நிதி தொகுப்பு 20 லட்சம் கோடிக்கும் மேலும் இருக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications