மலிவு விலை பாரத் பிராண்ட் அரிசி, பருப்பு – ரிலையன்ஸ் ரீடைல் வாயிலாக விற்பனை செய்கிறதா அரசு?

டெல்லி: பாரத் பிராண்ட் என்ற பெயரில் மத்திய அரசு மானிய விலையில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றை முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடைல் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்வது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பண வீக்கம் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் மத்திய அரசு மானிய விலையில் கோதுமை, அரிசி மற்றும் பருப்பு வகைகளை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

மலிவு விலை பாரத் பிராண்ட் அரிசி, பருப்பு – ரிலையன்ஸ் ரீடைல் வாயிலாக விற்பனை செய்கிறதா அரசு?


பாரத் என்ற பிராண்டின் கீழ் இந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசு ஏற்கனவே குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈ காமர்ஸ் தளங்களான ரிலையன்ஸ் ஜியோ மார்ட், அமேசான் மற்றும் பிக் பாஸ்கெட் ஆகியவற்றின் மூலம் மானிய விலையில் கோதுமை அரிசி மற்றும் பருப்பு வகைகளை விற்பனை செய்தது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை சமன் செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்த நிலையில் நீண்ட கால அடிப்படையிலேயே மத்திய அரசு தங்களுடைய பாரத் பிராண்ட் அரிசி ,கோதுமை, பருப்பு வகைகளை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

இதனை முகேஷ் அம்பானிக்கு சம்பந்தமான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தோடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் இன்றி அது மட்டும் இன்றி டி மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களோடும் இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. பாரத் பிராண்ட் என்பது இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக மத்திய அரசு தொடங்கியது.

சந்தையில் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் மற்றும் கொள்முதல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும் . மத்திய அரசு பாரத் ஆட்டா, பாரத் தால் மற்றும் பாரத் ரைஸ் என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டிலேயே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனையை தொடங்கிவிட்டது . மத்திய அரசு வழங்கக்கூடிய பிரதான் மந்திரி கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக தானியங்களை பெற முடியாதவர்களுக்கு கிடைக்கும் வகையில் மத்திய அரசு இந்த ஏற்பாடை செய்தது.

தற்போது National Cooperative Consumers Federation of India மற்றும் National Agricultural Cooperative Marketing Federation of India ஆகியவற்றின் வாயிலாக பாரத் பிராண்டட் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இருந்தாலும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வழியாக இவற்றை விற்பனை செய்யும் போது அதிகப்படியான மக்களை சென்றடையும் என அரசு நம்புவதாக தெரிகிறது. தற்போது ரிலையன்ஸ் 2,700 மளிகை பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+