மத்திய அரசு வரி வசூலில் ஆரம்பம் முதல் தீவிரம் காட்டி வரும் நிலையில் மறைமுக வரியில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
2020-21 ஆம் நிதியாண்டு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தக் காலகட்டத்தில் தான் மறைமுக வரி வசூல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அரசின் மொத்த வரி வசூலில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வரியை மறைமுக வரிப் பிரிவில் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு இரண்டு பிரிவில் வரியை வசூலிக்கிறது, நேரடி வரி - கார்ப்பரேட் வரி வருமானம் அடிப்படையில் நிறுவனங்கள் செலுத்தும் வரி மற்றும் மக்களின் வருமான வரி. மறைமுக வரி - நாட்டின் பணக்காரர்கள் முதல் ஏழை மக்கள் வரையில் செலுத்தும் சுங்க வரி, கலால் வரி, ஜிஎஸ்டி ஆகியவை இதில் வரும்.
மறைமுக வரி வசூல்
இந்த நிலையில் மத்திய அரசின் வரி வசூல் அளவீடுகளைப் பார்க்கும் போது, கடந்த சில வருடத்தில் மத்திய அரசின் மொத்த வரி வசூலில் மறைமுக வரி வசூல் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முதலும் முக்கியமான காரணமாக இருப்பது பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட அதிகப்படியான வரி விதிப்பு தான்.
2014-15 வரி வசூல்
2014-15 முதல் மத்திய அரசு பெட்ரோலியம் பிரிவில் வசூலிக்கப்பட்டு வரும் வரி வசூலின் தரவுகளை நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மொத்தம் 12.5 லட்சம் கோடி ரூபாய் வரியை வசூலித்துள்ளது. இதில் 6.9 லட்சம் நேரடி வரி வசூல் மொத்த வரியில் 55.2 சதவீதம், மீதமுள்ள 5.5 லட்சம் கோடி ரூபாய் மறைமுக வரி மொத்த வரியில் இது 44.4 சதவீதம்.
கார்ப்பரேட் வரி - வருமான வரி
2014-15 முதல் மத்திய அரசின் வரி வசூலில் கார்ப்பரேட் வரி வசூல் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2014-15ல் 34.5 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல் பங்கு, 2020-21ல் 22.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் வருமான வரி வசூல் 20.8 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மறைமுக வரி
இதேபோல் மறைமுக வரியில் பார்க்கும் போது மத்திய அரசின் மொத்த வரி வசூலில் மறைமுக வரிப் பிரிவில் 2014-15ல் 44.4 சதவீதமாக இருந்த மறைமுக வரி, 2020-21ல் 53.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2021-22 ல் 50 சதவீதமாகக் குறைந்தாலும், 2014-15 அளவில் இருந்து குறையவில்லை.
பெட்ரோலிய பொருட்கள்
மறைமுக வரிப் பிரிவில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வசூல் அளவு 2014-15 ஆம் நிதியாண்டில் 1.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது மொத்த மறைமுக வரி வசூல் அளவில் 22.8 சதவீதமாகும். இதுவே 2020-21ல் இதன் அளவு 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சமன் செய்த மத்திய அரசு
இதன் மூலம் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மூலம் அதிகப்படியான வருமானத்தைக் கடந்த 7 வருடத்தில் மத்திய அரசு பார்த்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வசூல் வைத்துக் கார்ப்பரேட் வரி வசூல் இழப்பை ஈடுசெய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications