பார்தி ஹெக்ஸாகாம் நிறுவனத்தில் தனது பங்குகளை இரண்டு தவணைகளாக, தலா 15% வீதம் விற்பனை செய்ய தேசிய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம்,TCIL) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் இலக்கை எட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐந்து பொது துறை வங்கிகள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யின் குறைந்தபட்ச பொது பங்குதாரர் (MPS) விதிமுறைகளைப் பின்பற்ற, அரசின் பங்குகளை 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவை செயலாளர் விவேக் ஜோஷி இந்த தகவலை அளித்தார்.

இதை தொடர்ந்து தற்போது செவ்வாயன்று, பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான பாரதி ஹெக்ஸாகாம் நிறுவனத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் TCIL 30% பங்குகளை வைத்திருக்கும் நிலையில், செபி ஒப்புதல் அளித்துள்ள Bharti Hexacom ஐபிஓ திட்டத்தின் படி, இந்த ஐபிஓ-வில் இப்பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது.
Bharti Hexacom சுமார் 28000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 4300 கோடி ரூபாய் நிதி திரட்டும் இலக்குடன் ஏப்ரல் மாதம் ஐபிஓ வெளியிட ரெடியாகி வருகிறது. மார்ச் 19 ஆம் தேதி Bharti Hexacom செபி-க்கு ஐபிஓ வெளியிட ஒப்புதல் அளித்தது.
"அரசின் இலக்கை எட்டுவதற்காக தற்போது பாரதி ஹெக்ஸாகாம் நிறுவனத்தில் 15% பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய TCIL திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் சந்தை சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது மீதமுள்ள 15% பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளோம்" என்று டெ லிகாம் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் எகனாமிக் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், TCIL நிறுவனம் பாரதி ஹெக்ஸாகாமில் 20% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்று, 15% பங்குகளை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரதி ஹெக்ஸாகாம் நிறுவனத்தில் சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் நிறுவனம் 70% பங்குகள் அதாவது 35 கோடி பங்குகள் வைத்திருக்கிறது. மீதமுள்ள 30% பங்குகளை அதாவது 15 கோடி பங்குகள் மத்திய அரசு நிறுவனமான TCIL வைத்திருக்கிறது என்று வரைவு சிவப்பு ஹெர்ரிங் விளக்கக் குறிப்பு (DRHP) தெரிவிக்கிறது.
தற்போது, இந்த பொது seector நிறுவனம், பாரதி ஹெக்ஸாகாமில் 7.5 கோடி பங்குகளை ஐபிஓ வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய உள்ளது. சரியான நேரத்தில் தனியார் பங்கு முதலீட்டை மத்திய அரசு விற்கிறது.
பாரதி ஹெக்ஸாகாம் என்பது ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஏர்டெல் பிராண்ட் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவைகள், லேண்ட் லைன் சேவைகள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனம் தான் இது.


Click it and Unblock the Notifications