மத்திய நிதியமைச்சகம் பல புதுமைகள் உடன் புதிய வருமான வரித் தளத்தை அறிமுகம் செய்த நிலையில், அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைத் தொடர்ந்து மக்களும், வல்லுனர்களும், பல அரசியல் தலைவர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் ஒன்றிய அரசு 4,200 கோடி ரூபாய் செலவு செய்து புதிதாக உருவாக்கியுள்ள வருமான வரித் தளம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

புதிய வருமான வரித் தளத்தில் பெரும்பாலான சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக ஐடிஆர் பைலிங், 15 CA/CB படிவங்கள் எனப் பல சேவைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு முடங்கியுள்ளது.
மேலும் லாக்இன் செய்ய நீண்ட காலம் காத்திருக்க வேண்டி நிலை உருவாகியுள்ளது, இது பழைய வருமான வரித் தளத்தில் நொடிப்பொழுதில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மத்திய நிதியமைச்சகம் இப்புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸ்-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் பிரச்சனைகளைக் கூடிய விரைவில் சரி செய்வதாகத் தெரிவித்துள்ளது இன்போசிஸ்.


Click it and Unblock the Notifications