டெல்லி: ஓடிடி செயலிகள் புதிய தொலைத்தொடர்பு மசோதாவின் கீழ் வராது என்றும், 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அது ஒழுங்குபடுத்தப்படும் எனவும் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
கடந்த வியாழன் அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய தொலைத்தொடர்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வேண்டி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஓடிடி செயலிகள் தொடர்பாக இந்த மசோதாவில் இடம்பெற்ற அம்சங்கள் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. சில இணைய செயற்பாட்டாளர்கள் இந்த மசோதா தொடர்பாக சில ஐயங்களை தெரிவித்து இருந்தனர்.

குறிப்பாக வாட்ஸ்அப் (மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது), டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற தகவல்தொடர்பு சேவைகளை வழங்கும் ஓடிடி நிறுவனங்கள் இந்த மசோதாவின் கீழ் வராது என்று பேச்சுக்கள் எழுந்தன. அதே சமயம், புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் உள்ள தொலைத்தொடர்பு என்ற பொதுவான வார்த்தையை வைத்துக்கொண்டு, ஓடிடி தளங்கள் புதிய தொலைதொடர்பு மசோதாவின் கீழ் வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக முதல்முறையாக இந்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து தனியார் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "2000 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தால் ஓடிடி தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டும் வருகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் ஓடிடி குறித்த பற்றிய எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் புதிய தொலைதொடர்பு மசோதாவில் ஓடிடி தளங்களை சேர்க்காததற்கு இதுகுறித்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தி வரும் மெட்டா நிறுவனம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், "புதிய தொலைதொடர்பு மசோதாவில் இருந்து ஓடிடிக்களை நீக்கியதை வரவேற்கிறோம். இது குறித்து மத்திய அமைச்சர் அளித்த விளக்கத்தையும் வரவேற்கிறோம். இது நாட்டின் டிஜிட்டல் சூழலையும் இணைய பொருளாதாரத்தையும் மேலும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." என குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து, அமேசான், கூகுள், மெட்டா, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஒன்வெப் ஆகியவற்றை உறுப்பினர்களைக் கொண்ட தொழில் துறை அமைப்பான, BIF எனப்படும் பிராட்பேண்ட் இந்தியா ஃபோரமும் இதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளது. புதிய தொலைதொடர்பு மசோதா தெளிவாக உள்ளதாகவும், தொலைத்தொடர்பு சேவை என்றால் என்ன என்ற வரையறையை தெளிவுபடுத்தும் வகையிலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையில் ஒடிடி தளங்களை சேர்க்காமலிருப்பதும் இணைய மற்றும் பிராட்பேண்ட் பயன்பாட்டை அதிகரிப்பதுடன் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும்." என்று கூறியுள்ளது.
இது குறித்து பி.ஐ.எப் தலைவர் ராமச்சந்திரன் தெரிவிக்கையில், "புதிய தொலைதொடர்பு மசோதா மிகவும் தெளிவாக உள்ளது. ஓடிடி தளங்கள் ஏற்கனவே ஐடி சட்டத்தின் கீழ் உள்ளது என்றும் அது மெய்டி எனப்படும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மேற்பார்வையில் இருப்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்தி உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை." என்றார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications