சென்னை: டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உண்மையில் இந்த எண்ணிக்கை 30,000 திற்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. வரும் மார்ச் மாதத்திற்குள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் நிலை மற்றும் மத்தியநிலை ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது. ஒட்டுமொத்த ஐடி துறைக்குமே இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழலில் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐடி நிறுவன ஊழியர்களுக்கான சங்கம் போராட்டம் நடத்தியது. சென்னையிலும் நடந்த போராட்டத்தில் டிசிஎஸ் நிறுவன நடவடிக்கைக்கு எதிரான பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர். டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய பணி நீக்க முடிவை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் ,அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஐடி ஊழியர்களுக்கான சங்கம் நடத்திய இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பிசினஸ் லைனுக்கு பேட்டி அளித்திருக்கும் ஐடி ஊழியர்களுக்கான சங்கத்தின் இணை செயலாளர் சந்திரசேகர் டிசிஎஸ் நிறுவனம் பணி அனுபவம் வாய்ந்த திறமையான நபர்களை குறிவைத்து வேலையில் இருந்து நீக்குகிறது என தெரிவித்திருக்கிறார். தலைமை பொறுப்புகளில் இருக்கும் பலரும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருக்கும் அவர் இதன் பிறகு அவர்கள் வேறு நிறுவனத்தில் வேலை தேடி செல்வது என்பது மிகக் கடினமானதாக இருக்கும் என கூறி இருக்கிறார்.
அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சர்வதேச அளவில் இந்த பிரச்சனையை கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம் என ஐடி ஊழியர்களுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் அலங்குனா தெரிவித்திருக்கிறார். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஜனனி, டிசிஎஸ் நிறுவனம் கூறுவதைப் போல 12,000 பேர் அல்ல 30 முதல் 40,000 பேர் வரை வேலையில் இருந்து நீக்கப்பட உள்ளனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் டிசிஎஸ் நிறுவனம் இதனை மறுத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் பணி அனுபவம் வாய்ந்தவர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு அவர்களை விட 80 சதவீதம் குறைவான சம்பளத்தில் ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்தி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். டிசிஎஸ் நிறுவனம் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது, 45 ஆயிரம் கோடி ரூபாயை டிவிடெண்டாக வழங்குகிறது ஆனால் அதனால் 12 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை வழங்க முடியாதா என்ற கேள்வியை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன் வைத்துள்ளனர்.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications