சர்வதேச டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எதிர்காலம் கிரிப்டோகரன்சி தான் எனக் கிரிப்டோ முதலீட்டாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் கூறிவரும் நிலையில், டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்த சீனா கிரிப்டோகரன்சிக்கு மிகப்பெரிய தடையை விதித்து மொத்தத்தையும் மூடியுள்ளது.
Recommended Video
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா உட்படப் பல நாடுகள் கிரிப்டோ சந்தையை ஒழுங்கு முறைப்படுத்தி 2 டிரில்லியன் டாலர் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது. கிரிப்டோகரன்சி எல்லாம் வல்லரசு நாடுகளுக்குத் தான் சரி என்ற கருத்து நிலவி வரும் வேளையில் சீனாவின் தடைக்குப் பின்பு கிரிப்டோகரன்சி குறித்து முக்கியமான முடிவுகளைத் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா எடுத்துள்ளது.
இந்தோனேசியா
வேகமாக வளரும் ஆசிய நாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் இந்தோனேசியா-வின் வர்த்தக அமைச்சரான முஹம்மது லுத்ஃபி, கிரிப்டோகரன்சி மீதான வர்த்தக விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் கடுமையாக்கப்படும். இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இந்தோனேசிய கிரிப்டோ சந்தையில் எல்லாவிதமான முறைகேடுகள், ஏமாற்று வேலைகள், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைக் கட்டுப்படுத்து முடியும் எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா கிரிப்டோ சந்தை
இந்தோனேசிய கிரிப்டோ சந்தை சுமார் 1.5 வருடம் இயங்கி வரும் நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு எக்ஸ்சேஞ்ச் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என இந்தோனேசியா-வின் வர்த்தக அமைச்சரான முஹம்மது லுத்ஃபி தெரிவித்துள்ளார்.
சீனாவை போல் இல்லை
இதேவேளையில் இந்தோனேசியா-வின் வர்த்தக அமைச்சரான முஹம்மது லுத்ஃபி நாங்கள் சீனாவை போல் கிரிப்டோ வர்த்தகத்தை எந்தக் காலத்திலும் தடை செய்ய விரும்பவில்லை, ஆனால் அதேவேளையில் இத்துறை வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்துவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து
இந்தோனேஷியாவை தொடர்ந்து தாய்லாந்து நாட்டின் சுற்றுலாத் துறை தற்போது சர்வதேச சுற்றுலாத் துறையில் பிரபலமாகி வரும் கிரிப்டோகரன்சி வாயிலான வர்த்தகத்தை அதாவது டிஜிட்டல் டோக்கன் திட்டத்தைத் தன் நாட்டிலும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
தாய்லாந்து சுற்றுலா துறை
இதுக்குறித்துத் தாய்லாந்து நாட்டின் சுற்றுலா துறையில் கவர்னர் யுதாசக் சுபசோர்ன் புதிதாகக் கிரிப்டோகாயினை உருவாக்க நாட்டின் செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் அமைப்பிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளார். இந்தக் கிரிப்டோ நாணயத்தை டிஜிட்டல் டோக்கனாக மாற்றி அனைத்து நிதி பரிமாற்றத்திலும் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
கிரிப்டோ சந்தை
இன்றைய கிரிப்டோ சந்தையில் அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியும் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இதன் மூலம் சந்தை மதிப்பீடு அடிப்படையில் 3வது இடத்தில் நீண்ட காலமாக இருந்த கார்டானோ தற்போது 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு 3வது இடத்தை ரிப்பிள் கைப்பற்றியுள்ளது.
இன்றயை கிரிப்டோகரன்சி விலை நிலவரம்
பிட்காயின் - 43,589.89 டாலர்
எதிரியம் - 3,042.95 டாலர்
ரிப்பிள் - 0.9507 டாலர்
கார்டானோ - 2.11 டாலர்
போல்காடாட் - 28.24 டாலர்
ஸ்டெல்லார் - 0.277 டாலர்
டோஜ்காயின் - 0.2032 டாலர்
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications