டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல, எண்ணற்ற சுற்றுலா தலங்களைக் கொண்ட ஒரு நகரமாகும். டெல்லியில் சுற்றிப் பார்க்க இருக்கும் இடங்கள் அதிகமாக இருப்பதால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது சுற்றுலா பயணிகளுக்கு சவாலாக இருக்கும். டெல்லியை சுற்றி பார்க்க சுலபமான மற்றும் மலிவான வழியைத் தேடுபவர்களுக்கு, டெல்லி மெட்ரோ "டூரிஸ்ட் ஸ்மார்ட் கார்டு" என்பதை வழங்குகிறது. அதன் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
டெல்லி மெட்ரோவின் "ஒன் டே டூரிஸ்ட் கார்டு" (One day tourists card) வசதி நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த டூரிஸ்ட் கார்டு வசதி செப்டம்பர் 2023 முதல் நடைமுறையில் உள்ளது.

டூரிஸ்ட் ஸ்மார்ட் கார்டு வகைகள்: இரண்டு வகையான ட்ராவல் கார்டுகள், டெல்லி மெட்ரோவில் கிடைக்கின்றன. அவை 1 டே கார்டு (One day card) மற்றும் 3 டே கார்டு (three day card)
சுற்றுலா ஸ்மார்ட் கார்டை எப்படி வாங்குவது?: டெல்லியின் எந்த மெட்ரோ நிலையத்திலும் இந்த சுற்றுலா கார்டை நீங்கள் பெறலாம். ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் செல்லுபடியாகும் இந்த கார்டு மூலம், டெல்லி மெட்ரோவில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் கார்டின் கட்டணம் எவ்வளவு?: ஒரு நாள் செல்லுபடியாகும் சுற்றுலா பயணிகள் கார்டின் விலை ரூ.200, இதில் ரூ.50 திரும்பப் பெறலாம். மூன்று நாள் சுற்றுலா பயணிகள் கார்டின் விலை ரூ.500, இதிலும் ரூ.50 திரும்பப் பெறலாம். இந்த சுற்றுலா பயணிகள் கார்டை விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் (Airport Express Line) தவிர அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
சுற்றுலா பயணத்திற்கு DMRC செயலி: சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட, டெல்லி மெட்ரோவின் "Delhi Metro Rail" என்ற அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் ஹோம் பேஜில் "டூர் கைடு" (Tour Guide) என்ற சிறப்பு பிரிவும் உள்ளது. இதில், டெல்லியில் உள்ள எந்த சுற்றுலா தலத்திற்கு அருகிலும் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களின் பட்டியலையும் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம்.
டெல்லி மெட்ரோ, செங்கோட்டை, ஜமா மஸ்ஜித், அக்ஷர்தாம் கோயில் மற்றும் கல்காஜி கோயில் உள்ளிட்ட டெல்லியின் அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களுடனும் அருகருகில் உள்ளது. இதுபோன்ற சமயங்களில், பயணிகள் இந்த பாஸ்களைப் பயன்படுத்தி டெல்லி மெட்ரோவின் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிடலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications