சென்னையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் பயமுறுத்தியுள்ள நிலையில், ஏடிஎம் இயந்திரம் மீதான பாதுகாப்புக் கேள்விக் குறியாகியுள்ளது. ஆனாலும் ஏடிஎம் இல்லாமல் மக்கள் வாழ்க்கையை நகர்த்த முடியுமா என்றால் கட்டாயம் முடியாது.
இதேவேளையில் இந்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு ஏடிஎம் பணப்பரிமாற்றம் மற்றும் இதர பணப் பரிமாற்றங்கள் மீதான கட்டணத்தை உயர்த்த வங்கிகளுக்கும், ஏடிஎம் இயந்திரங்களுக்கும் நிர்வாகம் செய்யும் நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் அன்லிமிடெட் இலவச ஏடிஎம் சேவைகள் அளிக்கப்பட்டால் எப்படியிருக்கும். இப்படித் தான் இந்தியாவில் 3 வங்கிகள் அன்லிமிடெட் இலவச ஏடிஎம் பயன்பாட்டுச் சேவை அளிக்கிறது.
இலவச ஏடிஎம் பயன்பாட்டுச் சேவை
தற்போது பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 5 முறை ஒவ்வொரு மாதமும் இலவச ஏடிஎம் சேவையை அளிக்கிறது. குறிப்பாக நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 முறையும், கிராமம் டவுன் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 முறையும் இலவச பணப் பரிமாற்ற சேவை அளிக்கப்படுகிறது.
ஏடிஎம் கட்டணம் உயர்வு
இலவச ஏடிஎம் பயன்பாட்டு எண்ணிக்கை முடிந்த பின்பு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஏடிஎம் பயன்பாட்டுக்கும் சாமானிய மக்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தற்போது இந்தக் கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் பணம் அல்லாத பரிமாற்றங்களுக்கு 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
3 வங்கிகள் இலவச சேவை
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் தற்போது இந்துஸ்இந்த் வங்கி, ஐடிபிஐ வங்கி, சிட்டி வங்கி ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் இலவச ஏடிஎம் பயன்பாட்டுச் சேவைகளை அளிக்கிறது.
சிட்டி வங்கி மூடல்
இதில் சிட்டி வங்கி இந்தியாவில் தனது ரீடைல் வர்த்தகத்தை மொத்தமாக மூடியுள்ள நிலையில், தற்போது இந்துஸ்இந்த் வங்கி, ஐடிபிஐ வங்கி மட்டுமே இத்தகைய சேவையை அளிக்கிறது.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி தற்போது தனது வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் மாதம் 5 முறை இலவச சேவையும், பிற வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் 6 மெட்ரோ நகரங்களில் 3 முறை இலவசமாகவும், நாட்டின் இதர பகுதிகளில் 5 முறை இலவசமாக ஏடிஎம் சேவைகளை வழங்குகிறது. ஆனால் பல திட்டங்களுக்கு அன்லிமிடெட் இலவச ஏடிஎம் சேவைகள் அளிக்கிறது IDBI வங்கி
இந்துஸ்இந்த் வங்கி சேவை
இந்துஸ்இந்த் வங்கி நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம்களிலும் இலவச சேவை அளிக்கிறது. இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவைகள் எவ்வளவு உயர்ந்திருந்தாலும் பணம் தான் 'கிங்' பல முறை நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்தக் கொரோனா காலத்தில் பணம் தான் பெரும்பாலான இடங்களில் பெறப்பட்டது.


Click it and Unblock the Notifications