வீடு வாங்குவது என்பது பெரும்பாலான மக்களுக்கு அவசியமான ஒன்று. ஆனால் ரியல் எஸ்டேட் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளியான அனராக் அறிக்கையில் கூட ரியல் எஸ்டேட் விலை விண்ணை எட்டியுள்ள தகவல்களை நாம் பார்த்தோம். எனவே ஒருவர் சரியான முன் பணம் செலுத்தினாலும், வீட்டை வாங்குவதற்கு ஹோம் லோன்களை பெறவேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஹோம் லோன்கள் பொதுவாக அதிக வட்டியைக் கொண்டுள்ளது. 20 வருடங்களுக்கு ஹோம் லோனை பெரும் நபர் தொடர்ந்து அசலை விட அதிகமாக வட்டி செலுத்த வேண்டும்.
இதனால் வீட்டுக் கடன் வாங்குபவரின் நிதி நிலைமை காலப்போக்கில் இன்னும் மோசம் அடையலாம். எனவே சில விஷயங்களை சிந்தித்து செயல்படுவதன் மூலம் நிதி சிக்கலில் சிக்காமல் இருக்கலாம். அதிக ஊதியம் பெறும் நபர் எனில் தங்கள் வேலையில் கிடைக்கும் போனஸ் மற்றும் வேறு ஏதேனும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை கொண்டு வீட்டுக் கடன் அசலில் வரவு வைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் EMI செலுத்துவதன் மூலம் அல்லது முன்பணம் செலுத்தும் தொகையை அதிகரிப்பதன் மூலம் வட்டியைக் கணிசமாகக் குறைக்க முடியும். இந்தப் பதிவில் ரூ.75 லட்சம் லோன் பெறும் ஒருவர் அதில் சுமார் ரூ.34.77 லட்சத்தை எவ்வாறு சேமிக்கலாம் என்பதை பார்ப்போம்.

இதற்காக ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒரு நபர் 9.50 சதவீத வட்டி விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு ரூ.75 லட்சம் லோனை பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த கடனுக்கு EMI தொகையாக மாதம் 65,527 ரூபாய் செலுத்த வேண்டும். தொடர்ந்து 25 ஆண்டுகள் முழுவதுமாக EMI செலுத்தி வந்தால் அந்த நபர் மொத்தமாக 1,21,58,175 ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். அப்படியானால் அசலும் வட்டியும் சேர்த்து 1,96,58,175 ரூபாய் செலுத்த வேண்டி வரலாம்.
கடன் வாங்கியவர் தலா ரூ.2.50 லட்சம் வீதம் 3 முறை முன்பணம் செலுத்தினால் ரூ.7.50 லட்சமாக இருக்கும். இந்த முன் பணத்தை ஒவ்வொரு ஆண்டும் செலுத்தி வரலாம். உதாரணமாக கடன் பெறுபவர் 2024-ஆம் ஆண்டு கடனை பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அக்டோபர் மாதத்தில் இருந்து EMI செலுத்த வேண்டும் என்றால், முன்பணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வங்கியிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த வருடத்தில் ஒரு முறையும், அதன் பிறகு 2025-ஆம் ஆண்டு ஒரு முறையும், 2026-ஆம் ஆண்டில் ஒரு முறையும் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
இது ரூ. 34,76,282 வட்டியை சேமிக்க உதவும். மேலும் 300 மாதங்களில் (25 ஆண்டுகள்) இருந்து 236 மாதங்களாக கடன் காலம் குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications