சென்னை: வங்கிகள் சேலரி அக்கவுண்ட்களுக்கு சிறப்பு அம்சங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், குறிப்பாக வேலையில் உள்ளவர்களை தக்கவைக்கவும் பல முயற்சிகளை செய்கின்றன. நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்கள் பலன் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, வேலையில் இருப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சேலரி அக்கவுண்ட்களைப் பல வங்கிகள் உருவாக்குகின்றனர். அந்த வகையில் பெரிய பொது வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்(SBI) சேலரி அக்கவுண்ட் விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
SBI இன் சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட், குறிப்பாக வேலையில் இருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு பணத்தை நிர்வகிப்பதை எளிதாக்க பல நன்மைகள் மற்றும் அம்சங்களை வழங்குகிறது.

SBI சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட், வங்கியின் விதிகளைப் பொறுத்து மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு புதிய சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட்டைத் திறப்பது பற்றி நீங்கள் நினைத்தால், SBIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்புகொண்டு, சேலரி அக்கவுண்ட் பற்றிய சமீபத்திய தகவல்களைப் பெறுவது நல்லது.
SBI சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் என்றால் என்ன?: SBI சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் என்பது வேலையில் உள்ள நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு அக்கவுண்ட் ஆகும். இது தனித்துவமான பலன்களோடு வருகிறது. அத்துடன் ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் அம்சங்களை இதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.

SBI சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட்டின் நன்மைகள் என்ன?: ஒவ்வொரு SBI சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் வைத்திருப்பவரும் பெறக்கூடிய நன்மைகள்.
1) ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் நீங்கள் எந்த தொகையையும் இருப்பில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
2) ஜீரோ பேலன்ஸ் இருக்கும் பட்சத்தில் சில வங்கிகள் உங்களிடம் அபராதமாகக் குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும். சேலரி அக்கவுண்ட் வைத்திருப்பவருக்கு அந்தப் பிரச்சனை இல்லை.
3) பிரத்தியேக நன்மைகளுடன் இலவச டெபிட் கார்டு வழங்கப்படுகிறது.
4) இந்தியாவில் உள்ள எஸ்பிஐ / பிற வங்கிகளின் ஏடிஎம்கள் முழுவதும் வரம்பற்ற பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.
5) ஆன்லைன் RTGS / NEFT கட்டணங்கள் தள்ளுபடி.
6) இலவச தனிநபர்/ விமான விபத்து காப்பீடு.
7) தனிநபர் கடன்கள், கார் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் மீது குறைந்த வட்டி.
SBI வங்கியானது பல்வேறு துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட்களை வடிவமைத்துள்ளது. அவற்றை இங்கே பார்ப்போம்.
1) சென்ட்ரல் கவர்ன்மென்ட் சேலரி பேக்கேஜ் (CGSP)
2) ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் (SGSP)
3) ரயில்வே சேலரி பேக்கேஜ் (RSP)
4) கார்ப்பரேட் சேலரி பேக்கேஜ் (CSP)
5) ஸ்டார்ட் அப் சேலரி பேக்கேஜ் (SUSP)
6) இந்தியன் கோஸ்ட் கார்ட் சேலரி பேக்கேஜ் (ICGSP)
வங்க கிளைகளை அணுகாமல் "yono" அப்ளிகேஷன் மூலம், நீங்கள் சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட்களை திறக்கலாம் அல்லது அருகில் உள்ள SBI வங்கிகளைப் பார்வை இடலாம்.
சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் திறக்க தேவையான ஆவணங்கள்:
1) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2) பான் கார்டு
3) லேட்டஸ்ட் சேலரி ஸ்லிப்
மேலும் RBI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் தேவை.
ஆஃபர் லெட்டர் மற்றும் லேட்டஸ்ட் பே ஸ்லிப் போன்றவற்றைச் சமர்ப்பித்தால் உங்களது சேமிப்பு கணக்குகளை, சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட்களாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications