சென்னை: சமீபத்தில் மத்திய அரசு இ-ஷ்ரம் (e-SHRAM) கார்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்கும் நோக்கில் இந்த கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டைப் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அமைப்புசாரா தொழிலாளர்களான ரோட்டோரத் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெரு ஓரங்களில் கடை வைத்திருப்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற நபர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க இ-ஷ்ரம் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களால் கிடைக்கும் நன்மைகளை இந்த ஒரே ஒரு கார்டின் மூலம், இந்த வகை தொழிலாளர்கள் பெற முடியும்.

இ-ஷ்ரம் கார்டு பெற யாரெல்லாம் தகுதியானவர்கள்?: கம்பெனியின் கீழ் வேலை பார்க்கும் எந்த ஒரு நபரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. இந்த திட்டம் முழுக்க முழுக்க அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மே 5ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, மொத்தமாக 29,57,39,546 கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கார்டு பெற விண்ணப்பிக்க உங்களுடைய வயது 16 முதல் 59 வயது வரை இருக்க வேண்டும்.
இ-ஷ்ரம் கார்டு பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?:
ஸ்டேப் 1: https://eshram.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டேப் 2: புது இ-ஷ்ரம் கார்டு பெற 'ரெஜிஸ்ட்ரேஷன்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 3: உங்களுடைய மொபைல் நம்பர் கேப்ட்சா போன்றவற்றை கொடுத்து நீங்கள் உள் நுழையலாம்.
ஸ்டேப் 4: அதன்பின் தேவையான விவரங்களை கொடுத்து ரெஜிஸ்ட்ரேஷனை முடித்த பிறகு உங்களுக்கு இ-ஷ்ரம் கார்டு கிடைத்துவிடும். இது டிஜிட்டல் முறையில் கொடுக்கப்படும் கார்டு.
இ-ஷ்ரம் கார்டு பெற தேவைப்படும் ஆவணங்கள்:
1. ஆதார் கார்டு
2. பான் கார்டு
3. பேங்க் அக்கவுண்ட்
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ரெஜிஸ்ட்ரேஷனுக்கு தேவைப்படும் ஆவணங்களாக ஆதார் கார்டு உள்ளது. மேலும் ஆதார் கார்டு உங்களுடைய மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இ-ஷ்ரம் கார்டின் பயன்கள்:
1. அரசு நேஷனல் பென்ஷன் ஸ்கீம், அடல் பென்ஷன் ஸ்கீம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இ-ஷ்ரம் கார்டு பெற, பதிவு செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர், எந்தத் திட்டத்திற்கு தகுதியானவர் என்பதை ஆராய்ந்து, அவர் அந்த திட்டத்தின் பலன்களை இந்த ஒரு கார்டை வைத்தே பெற முடியும்.
2. குறிப்பாக மற்ற அலுவலகங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு, பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதைப்போலவே இது போன்ற தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
3. இ-ஷ்ரம் கார்டு, தொழிற்பயிற்சி திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் நிதி உதவித் திட்டங்கள் உட்பட பல்வேறு அரசு சேவைகளை தொழிலாளர்கள் பெற உதவுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications