சென்னை: கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, உங்கள் பில்களைச் செலுத்துவது, எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பதிவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்
கிரெடிட் கார்டுகளில் செலவு செய்வது ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை அறிய உதவுகிறது. இது தவிர உங்களுடைய கிரெடிட் கார்டுகளை, நீங்கள் பொறுப்புடன் நிர்வகித்தால் அதிக பலன்களைப் பெற முடியும். சான்றாக, மளிகைப் பொருட்கள், எரிபொருள் மற்றும் யூட்டிலிட்டி பில்கள் போன்ற பேமெண்ட்களுக்கு கிரெடிட் கார்டு வழங்குநர்கள், கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றனர்.

வசதி: ஒவ்வொரு மாதமும், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது பல சிறப்பான பலன்களை வழங்குகிறது. உங்களுடைய EMI, எரிபொருள் மற்றும் யூட்டிலிட்டி பில்கள் போன்றவற்றை ஒரே கார்டைக் கொண்டு நிர்வகிப்பது எளிதான ஒன்றாகவே கருதப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் வரிசையில் நின்று பில் செலுத்துவது போன்ற விஷயங்களை, இது எளிதாக்குகிறது
ரிவார்டுகளைப் பெறலாம்: இந்தியாவில் உள்ள பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பாயிண்ட்டுகள் மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகளை வழங்குகிறது. இந்த ரிவார்டு பாயிண்டுகளை, பிறகு நீங்கள் ஷாப்பிங் மற்றும் உங்களுடைய பொழுதுபோக்குக்காகச் செலவு செய்யும்போது, தள்ளுபடி பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.
வட்டி இல்லாத காலம்: கிரெடிட் கார்டுகள் சலுகைக் காலத்தை வழங்குகின்றன, இதன் போது கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பயனர்கள் எந்த வட்டி கட்டணமும் இல்லாமல் பயன் பெறலாம். இந்த வட்டி இல்லாத காலம் பொதுவாக 20 முதல் 50 நாட்கள் வரை இருக்கும்.
கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம்: கிரெடிட் கார்டுகளின் பொறுப்பான பயன்பாடு ஒரு நபரின் கடன் வரலாற்றை நிர்வகிப்பதில் பெரும் பங்களிப்பை அளிக்கிறது. அதாவது சரியான நேரத்தில் பணம் செலுத்துவது மற்றும் நல்ல நிதி நடத்தை இருந்தால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம். மேலும், எதிர்காலத்தில் நீங்கள் கிரெடிட் கார்டு பெறுவதற்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் அவசியமாகிறது.
பாதுகாப்பு: பல கிரெடிட் கார்டு வழங்குநர்கள், நிறைய பாதுகாப்பு விதிமுறைகளை அளிக்கின்றனர். அதன்படி ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பணப்பரிவர்த்தனை இருந்தால் அவற்றை கண்டுபிடிக்கும் வகையில் பாதுகாப்பை வழங்குகின்றனர்.
கிரெடிட் கார்ட் செலவுகளைக் கண்காணித்தல்: கிரெடிட் கார்டு அறிக்கைகள் உங்கள் செலவு முறைகள் பற்றிய விரிவான அறிவிப்பை வழங்குகின்றன. மளிகை சாமான்கள், உணவு மற்ற பயன்பாடுகளுக்கு, நீங்கள் செய்த செலவுகளை வகைப்படுத்தி காண்பிக்கின்றன. பில் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மாதாந்திர செலவுகளைத் திறமையாக கண்காணிக்க முடியும். மேலும் அதில் ஏதேனும் வீண் செலவுகள் செய்து இருக்கிறீர்களா.. என்பதை ஆராய்வதற்கும் வழி வகுக்கும். இதனால் திறமையான நிதி முடிவுகளை எடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications