3 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின் தட்டுப்பாடு.. தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் இரவு மின்வெட்டு

தமிழ்நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு பிரச்சனை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது, குறிப்பாக இரவு நேரத்தில் மின்வெட்டு அதிகமாகும் காரணத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உண்மையில் மின் பற்றாக்குறை பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் சுமார் 8 மாநிலம் + தலைநகர் டெல்லியிலும் உள்ளது.

இந்த நிலையில் மின்சார தட்டுப்பாட்டுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களும் இணைந்து மத்திய அரசிடம் இருக்கும் உபரி மின்சாரத்தில் பகிர்வு கேட்டு உள்ளது. மத்திய அரசிடம் பொதுவாக 14-15 ஜிகாவாட் மின்சாரம் நேரடியாக அனல்மின் நிலையம் மற்றும் நீர்மின் நிலையத்தில் இருந்து பெறும், இதை மின்பற்றாக்குறை கொண்டுள்ள மாநிலங்களுக்கு அளிக்கும்.

3 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின் தட்டுப்பாடு.. தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் இரவு மின்வெட்டு

இந்தியாவில் மின் பற்றாக்குறை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, செப்டம்பர் மாதம் மட்டும் 56 கோடி கிலோவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம் இந்தியா முழுவதும் எல்நினோ காரணத்தால் மழைபொழிவு குறைந்து ஹைட்ரோபவர் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்தியாவில் இருக்கம் ஒட்டுமொத்த நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி 20% வரை குறைந்துள்ளது. இதோடு நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி ஆலைகள் மெயின்டனென்ஸ் பணிகள் காரணமாக முடங்கியுள்ளது, இதன் மூலம் 41 ஜிகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Also Read

இதேவேளையில் தொழிற்துறையில் மின்சார தேவை அதிகமான காரணத்தால் உற்பத்திக்கும் - சப்ளை - டிமாண்டுக்கும் மத்தியிலான பாதிப்பு அதிகமாக தற்போது மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதேபோல் காலை வேளையில் சூரிய சக்தி மூலம் சோலார் மின்சார உற்பத்தி வாயிலாக மின்பற்றாக்குறை ஏற்படாமல் இயங்க வைக்கிறது, ஆனால் இரவில் சோலார் மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தால் மின்வெட்டு ஏற்படுகிறது.

தற்போது பஞ்சாபில் ஒரு சில பகுதிகளில் ஒரு நாளுக்கு 14 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 8 மாநிலமும் தலைநகர் டெல்லியும் இணைந்து மத்திய அரசிடம் கூடுதல் அவசர மின்சாரப் பகிர்வைக் கேட்டுள்ளன.

இதன் மூலம் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் 14 -15 ஜிகாவாட் மின்சாரத்தை முன்னுரிமை அடிப்படையில் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு நிலையைச் சமாளிக்க மத்திய அரசு பகலில் உற்பத்தியாகும் சோலார் மின்சாரத்தை இரவில் பயன்படுத்தும் வகையில் பேட்டரியில் சேமித்து இயங்க ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாடு அரசு சோலார் மின்சாரத்திற்கு சுமார் 1 லட்சம் வரையிலான மானியத்தைக் கொடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+