நாடாளுமன்ற MP-க்களின் சம்பளம் பற்றி தெரியுமா? அடடா இது தெரியாம போச்சே!

சென்னை: நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் நபர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டியிருக்கும். மக்களின் குறைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லும் முக்கிய பங்கு இவர்களுக்கு உள்ளது. நமது நாட்டின் நிர்வாகத்தை திறம்பட கையாள்வதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். இந்த பணியை சிறப்பாக செய்வதற்கு, ஏற்ற வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இவர்களுக்கு சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

நமது நாட்டின் நாடாளுமன்றங்களில் பணியாற்றும், உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் நாட்டின் சட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலும், மக்களின் குறைகளை அரசிடம் எடுத்து சொல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது பணியை அங்கீகரிக்கும் விதமாக அரசாங்கம் இவர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் பல்வேறு படிகளை வழங்குகிறது.

நாடாளுமன்ற MP-க்களின் சம்பளம் பற்றி தெரியுமா? அடடா இது தெரியாம போச்சே!

சில நேரங்களில் பிறரின் சம்பளத்தைப் பற்றி அறிவதே சுவாரசியமான ஒன்றுதான். அந்த வகையில் சினிமா பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்.. அரசியல்வாதிகள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது.. என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். இது போன்ற நபர்களுக்காக இந்தப் பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பெறும் சம்பள விவரங்களை தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

சம்பளம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். இது மட்டுமல்லாமல், அவர்களின் சம்பளம் 5 வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் படிகளின் மூலம் 5 ஆண்டுக்கு ஒரு முறை இந்த உயர்வு ஏற்படுகிறது.

அடிப்படை சம்பளம்: தற்போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ. 50,000 அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த அடிப்படை சம்பளம் 2010ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

தினசரி படி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்து கொள்வதற்கும், குழுக்கூட்டங்களில் பங்கேற்பதற்குமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 2,000 படி (Daily Allowance) வழங்கப்படுகிறது. இந்த படிகள் அவர்களது அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் தொகையாகும்.

பயணத்திற்கான படி: நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பணிகளுக்காக பயணம் செய்யும்போது, 1 கிலோ மீட்டருக்கு ரூ.16 என்ற விகிதத்தில் பயணப்படி பெறுகின்றனர். இதன் மூலம், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திப்பது போன்ற பணிகளை செய்ய ஊக்கமளிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ரூ.45,000 தொகுதிப்படி (Constituency Allowance) எனப்படும் தொகையையும் பெறுகின்றனர். இது அவர்களது தேர்தல் தொகுதி தொடர்பான பணிகளுக்காகவும், மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் செய்யப்படும் செலவுகளை சமாளிக்க வழங்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+