யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு புதன்கிழமை அம்மாநில வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்-ஐ வெளியிட்டு உள்ளது. உத்தரப்பிரதேச அரசு இன்று கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட் அறிக்கையை உத்தரபிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா தாக்கல் செய்தார்.
யோகி ஆதித்யநாத்-ன் 2வது ஆட்சி காலக்கட்டத்தில் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்கு வந்த பிறகு ஏழாவது முழுப் பட்ஜெட் அறிக்கை இது. இதேபோல் Amrit Kal-ன் முதல் பட்ஜெட் இது என யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச அரசு முன்வைத்துள்ள பட்ஜெட் 2023-24 அறிக்கையில், இளைஞர்கள், ஸ்டார்ட்அப்கள், பெண்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பட்ஜெட் மூலம் உத்தரப்பிரதேச 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர பாதை வகுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில அரசு
உத்தரப்பிரதேச மாநில அரசு இன்று தாக்கல் செய்துள்ள 2023-24 பட்ஜெட்டில் உள்ள முக்கியச் சலுகைகளில், அம்மாநிலத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் வழங்க சுமார் 3600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முக்கியப் பட்ஜெட் அறிவிப்புகள்
மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்ஃபோனுக்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு
மாநிலத்தில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க ரூ.60 கோடி ஒதுக்கீடு
கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொடக்கப் பணியாளர்களை ஊக்குவிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
இளம் வழக்கறிஞருக்கு உதவ ரூ.10 கோடி ஒதுக்கீடு, வழக்கறிஞர் நலனுக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த உத்தரபிரதேசத்தில் மூன்று புதிய மகளிர் போலீஸ் பட்டாலியன் உருவாக்க முடிவு
விதவை ஓய்வூதியத் திட்டம்
விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்கள் நலனுக்காக ரூ.4,032 கோடி ஒதுக்கீடு
கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்திற்கு 1050 கோடி ரூபாய்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.
ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.150 கோடி சிறப்பு ஒதுக்கீடு.
மார்ச் 2017 முதல் பிரதமர் வீடுகள் திட்டத்தின் கீழ் 17.62 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம்
7 லட்சம் கோடி உத்திரபிரதேச பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2023-2024 நிதியாண்டில் 585 கோடி ரூபாயும், ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்திற்குக் கூடுதலாக 465 கோடி ரூபாயும் பட்ஜெட் ஒதுக்கீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது.
6.50 லட்சம் கோடி ரூபாய்
உத்தரபிரதேச வரலாற்றில் இது மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும் என்று அம்மாநில நிதியமைச்சர் முன்னதாகவே செய்தியாளர்களிடம் கூறினார். உத்தரபிரதேச மாநில அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆண்டுப் பட்ஜெட்டை 6.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தாக்கல் செய்தது. 2022 டிசம்பரில் ரூ.33,769.55 கோடிக்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, பட்ஜெட்டின் மொத்த அளவு சுமார் ரூ.6.50 லட்சம் கோடியாக இருந்தது.
7 லட்சம் கோடி ரூபாய்
உத்தரப்பிரதேச அரசு இன்று கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பட்ஜெட் அறிக்கையை உத்தரபிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா தாக்கல் செய்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications