நொய்டா: உத்திரபிரதேச மாநில அரசு முதன்முறையாக செமிகண்டக்டர்களுக்கான தொழில் பூங்காவை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. நொய்டா விமான நிலையத்திற்கு அருகில் இந்த தொழில் பூங்கா அமையும் என சொல்லப்படுகிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அரசு தங்களுடைய மாநிலத்தில் முதன்முறையாக செமிகண்டக்டர் தொழில் பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளது. இது நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஜேவர் பகுதியில் அமைகிறது.

யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகிலேயே இந்த தொழில் பூங்கா அமைய இருப்பது இதன் மற்றொரு சிறப்பு ஆகும். நொய்டாவின் செக்டார் 10 பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் கிளஸ்டர் அமைக்கப்படும் என்றும், செக்டார் 28 பகுதியில் 125 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் கிளஸ்டர் அமைக்கப்படும் என்றும் உத்தரபிரதேச மாநில அரசு கூறுகிறது.
இதன் மூலம் பல்வேறு செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களும் உத்தரபிரதேசத்தை நோக்கி வருவார்கள், மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இதற்காகவே யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு செமிகண்டக்டர் கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் செமிகண்டக்டர் பிரிவில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .குறிப்பாக மூலதனத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வரிகளும் ரத்து செய்யப்படும் என உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது. இந்த செமிகண்டக்டர் பூங்காவில் 8 MLD நீர் சுத்திகரிப்பு நிலையம், 60 MLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அத்தியாவசியமான மின் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கின்றன.
இந்த தொழில் பூங்கா நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைகிறது. இதனால் ஏற்றுமதி இறக்குமதிக்கு சாதகமான இடமாக இந்த இடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி யமுனா எக்ஸ்பிரஸ்வேக்கு அருகிலேயே இருப்பதால் மற்ற மாநிலங்களுடனான சரக்கு போக்குவரத்தும் எளிமையாக இருக்கும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களும் செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றன.
இதனால் செமிகண்டக்டர் சார்ந்த நிறுவனங்கள் தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தற்போதைக்கு குஜராத் மாநிலத்தில் டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications