பதோஹி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு சாதாரண மனிதனுக்கு வியக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால், அவருடைய வங்கிக் கணக்கில் திடீரென ரூ. 9990 கோடி பணம் வந்துள்ளது. நம்ப முடியவில்லையா.. ஆனால் இது உண்மைதான். இதன் பின்னால் என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
நம் பேங்க் அக்கவுண்டில் கோடிகளில் பணம் வந்து விழுந்தால் என்ன செய்வோம்.. என்று நம்மில் பலர் நினைத்திருப்போம். ஆனால் இது போன்ற சம்பவம் உண்மையில் ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின், பதோஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் பரோடா UP வங்கியில் கணக்கு வைத்துள்ளார், சமீபத்தில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.99,99,94,95,999.99 (ரூ.99 பில்லியன் 99 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 999) இருந்துள்ளது.
இதைப் பார்த்த பானு பிரகாஷுக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. இவ்வளவு தொகை எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ள உடனே வங்கி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளார். வங்கி அதிகாரிகளும் உடனே இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை பானு பிரகாஷின் கணக்கில் வந்தது ஒரு தவறா அல்லது ஏதாவது மோசடியாக என்பது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
முடிவில் பானு பிரகாஷின் வங்கி கணக்கு கிசான் கிரெடிட் கார்டு கடன் கணக்கு என்றும், அது செயல்படாத சொத்தாக மாறிவிட்டது என்றும் வங்கி கூறியது. இது குறித்து பேசிய கிளை மேலாளர் ரோகித் கௌதம், "சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக இவ்வளவு பெரிய தொகை பானு பிரகாஷின் அக்கவுண்டில் காண்பிக்கப்பட்டது". இந்தத் தவறை சரி செய்ய, நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. இதே போல கார் ஓட்டுனரான ராஜ்குமார் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ. 9000 கோடி கிரெடிட் ஆனது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் உடனே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னுடைய TMB வங்கிக் கணக்கில் இதுபோன்ற தொகை காண்பிக்கப்பட்டது என்று கூறினார். தனது வங்கிக் கணக்கில் இவ்வளவு தொகை எப்படி வந்தது, மேலும் இது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள ராஜ்குமார் அதிலிருந்து ரூ. 21,000 ரூபாயை எடுத்து செலவும் செய்துள்ளார். அதன் பின் வங்கி நிர்வாகம், பிரச்னையைக் கண்டுபிடித்து சரி செய்தனர்.
இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அது என்னவென்றால் நமது வங்கி கணக்குகளின் அறிக்கையை அடிக்கடி சரி பார்க்க வேண்டும் என்பது தான். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனே வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்கவும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications