ஒட்டுமொத்த இந்தியாவில் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய மக்கள்தொகை மசோதா 2021.
சீனாவில் ஒரு குழந்தை திட்டம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அது தளர்த்தப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்துடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய மக்கள்தொகை மசோதா 2021 தாக்கல் செய்துள்ளது.
பல சலுகைகள்
அரசின் இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் மக்களுக்கு அதிகளவிலான சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கும் அதிகளவிலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு செய்வோர்
இதேபோல் இரண்டு அல்லது ஒரு குழந்தை பெற்ற பின்பு தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2 குழந்தைகள் சலுகை
2 குழந்தைகள் மட்டுமே கொண்ட பெற்றோர்களுக்கு
1. அடிப்படை சேவைகளின் (Utilities) கட்டணத்தில் சலுகை. அதாவது தண்ணீர், மின்சாரம், வீட்டு வரி ஆகிய கட்டணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான தொகை திருப்பி அளிக்கப்படும்.
2. வீட்டுக் கடனில் குறைவான வட்டி. இரண்டு குழந்தை மட்டுமே உள்ளவர்களுக்கு வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படும்
3. இரண்டு குழந்தை மட்டுமே உள்ள அரசு ஊழியர்களுக்குப் பிற ஊழியர்களைக் காட்டிலும் 2 முறை கூடுதலாகச் சம்பள உயர்வு அளிக்கப்படும்.
4. முழுச் சம்பளத்துடன் 12 மாதம் பேரு கால விடுமுறை
5. இலவச மருத்துவச் சேவைகள்
6. மனைவி அல்லது கணவனுக்கு இலவச இன்சூரன்ஸ் கவரேஜ்
ஒரு குழந்தை
இதேபோல் ஒரு குழந்தைக்குப் பின் தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு ஏற்கனவே குறிப்பிடப்பட்டு உள்ள சலுகைகள் உடன் கூடுதலாக
1. கல்லூரி படிப்பு வரையில் இலவச கல்வி, எவ்விதமான கட்டணமும் இல்லாமல் படிக்க முடியும்.
2. ஐஐஎம், எய்ம்ஸ் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் ஒரே ஒரு குழந்தையாக இருப்போருக்குக் கூடுதல் முன்னுரிமை.
3. அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பள உயர்வு. பிற ஊழியர்களை ஒப்பிடுகையில் கூடுதலாக 4 முறை சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது.
4. 20 வயது வரையில் குழந்தைக்கு இலவச மருத்துச் சிகிச்சை மற்றும் இன்சூரன்ஸ் கவரேஜ்
5. NPS திட்டத்தில் 3 சதவீதம் கூடுதல் தொகை வைப்பு
6. இதுமட்டும் அல்லாமல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு முறை சலுகையாக ஆண் குழந்தைக்கு 80000 ரூபாயும், பெண் குழந்தைக்கு 1 லட்சம் ரூபாயும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications