பங்குகளுக்கு எதிராக ரூ.1 கோடி வரை கடன்! ரிசர்வ் வங்கியின் புதிய ஆஃபர்.. என்ன சொல்கிறார் நிதின் காமத்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நேற்று ஒரு முக்கியமான மற்றும் நல்ல மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி வங்கிகள், பங்குகளுக்கு ஈடாக ரூ.1 கோடி வரை கடன் கொடுக்கலாம். இதற்கு முன்பு இந்த வரம்பு வெறும் ரூ.20 லட்சமாக மட்டுமே இருந்தது. இந்த அறிவிப்பு, பத்திரங்களுக்கு ஈடாகக் கடன் (Loan Against Securities - LAS) என்பதை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கும் என்று நம்பப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்- கடன் வரம்பு அதிகரிப்பு: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) இனி பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்களுக்கு எதிராக ரூ.1 கோடி வரை கடன் வழங்கலாம். இது தனிநபர்களுக்கு நிதிச் சுதந்திரத்தை அளிக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

பங்குகளுக்கு எதிராக ரூ.1 கோடி வரை கடன்! ரிசர்வ் வங்கியின் புதிய ஆஃபர்.. என்ன சொல்கிறார் நிதின் காமத்

பங்குகளுக்கு ஈடான கடன் (LAS): பங்குகள் அல்லது பத்திரங்களை வைத்திருக்கும் பலர், அவசரத் தேவைக்கு தனிநபர் கடன்களையோ அல்லது கிரெடிட் கார்டுகளையோ பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தனிநபர் கடன்களுக்கு 12-25% வரையிலும், கிரெடிட் கார்டுகளுக்கு 40%அதிகமாக கூட செல்லலாம். ஆனால், LAS மூலம் பெறப்படும் கடன்களுக்கு, பொதுவாக தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை விட குறைந்த வட்டி விகிதங்களே விதிக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு தேவை: மக்கள் LAS பற்றி அறியாமல் அதிக வட்டி கடன்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைப் பற்றி வருத்தம் தெரிவிக்கிறார் நித்தின் கமாத், மேலும் அவர் கூறுகையில் ஜீரோதா கேபிடல் நிறுவன ஊழியர்கள் கூட LAS முறையில் கடன் வாங்காமல் பர்சனல் லோன் வாங்குவதை நான் கவனித்துள்ளேன் என தனது பதிவில் தெரிவித்துள்ளார். LAS மூலம் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும் என்பது மக்களுக்குத் தெரியாது. இந்த முறையின் அடிப்படையில் தான் எங்கள் நிறுவனத்தின் கணக்கு இன்னும் ரூ.450 கோடி மட்டுமே இருக்கிறது என்று நிதின் காமத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.

புதிய கடன் வரலாறு உருவாக்க சிறந்த வழி: புதிதாக கடன் வாங்கும் நபர்களுக்கு அல்லது மோசமான கடன் மதிப்பெண்கள் உள்ளவர்களுக்கு, LAS மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், பங்குகளை பிணையாக வைத்து கடன் பெறுவதால், கடன் வழங்குநர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் புதிதாக கடன் வாங்குவோர்கள் தங்களின் கடன் வரலாற்றை எளிதாக உருவாக்க முடியும்.

LAS எப்படி செயல்படுகிறது?: LAS என்பது, உங்களிடம் உள்ள பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds) அல்லது பத்திரங்களை பிணையாக (collateral) வைத்து கடன் பெறுவது ஆகும். நீங்கள் உங்கள் பங்குகளை விற்க வேண்டியதில்லை. அவை வங்கியில் பிணையாக வைக்கப்படும், அதன் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நீங்கள் கடனாகப் பெறலாம்.

உதாரணமாக: உங்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள பங்குகள் இருந்தால், ரூ.20 லட்சம் கடன் தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் பங்குகளை விற்காமல், அதை வங்கியில் பிணையாக வைத்து கடன் பெறலாம். உங்கள் பங்குகள் வங்கியின் கணக்கில் இருக்கும், அவற்றின் மதிப்பை பொறுத்து உங்களுக்கு கடன் வழங்கப்படும். வட்டி விகிதங்கள் தனிநபர் கடன்களை விட குறைவாக இருக்கும்.

LAS இன் நன்மைகள்: குறைந்த வட்டி விகிதம்: தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்.

பங்குகளை விற்க வேண்டியதில்லை: உங்களின் பங்குகளை விற்காமல், அவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து அனுபவிக்க முடியும். சந்தை ஏற்ற இறக்கங்களின் போது இது ஒரு பெரிய அனுகூலமாகும்.

விரைவான கடன்: தனிநபர் கடன்களை விட மிக வேகமாக கடன் ஒப்புதல் மற்றும் விநியோகம்.

சிபில் ஸ்கோரை மேம்படுத்தலாம்: முறையாக கடன் தவணைகளை செலுத்துவதன் மூலம் உங்கள் சிபில் ஸ்கோரை மேம்படுத்த முடியும்.

எளிதாக திருப்பிச் செலுத்தும் முறை: பெரும்பாலும், நீங்கள் வட்டி தொகையை மட்டும் செலுத்தி, கடன் காலத்தின் முடிவில் அசல் தொகையை செலுத்தலாம் அல்லது மாதாந்திர தவணைகளாகவும் செலுத்தலாம்.

நிதி விழிப்புணர்வின் அவசியம்: இந்த வசதி இருந்தாலும், விழிப்புணர்வு மிகவும் மோசமானது என்று ஜீரோதா போன்ற நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு தங்களிடம் இருக்கும் பங்குகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்பது தெரிவதில்லை. இதனால், அவர்கள் அதிக வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன்களை வாங்கி நிதிச் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர்.

இந்த புதிய வரம்பு அதிகரிப்பு, மக்களுக்கு ஒரு பெரிய நிதிச் சலுகையாகும். இந்த வசதியை மக்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதன் மூலம், அதிக வட்டி சுமையிலிருந்து தப்பித்து தங்கள் நிதி நிலைமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+