இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் போக்கு அதிகரித்து வருகிறது. 10 ரூபாய்க்கு டீ குடிப்பதற்குக் கூட ஆன்லைன் முறையில் பணம் செலுத்துகிறோம். அந்த அளவுக்கு இந்தியர்கள் மத்தியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டன. அதிலும் இளைஞர்கள் எல்லாம் பணத்தை ரொக்கமாக தொடுவதே அரிதாவிட்டது. இந்த புது புது வசதிகள் இருப்பதாலேயே பர்ஸ் இல்லை என்றாலும் கூட மொபைலை வைத்தே எங்கு சென்றாலும் நம்மால் சமாளிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக யுபிஐ மக்களிடையே அதிகம் பிரபலமடைந்துள்ளது.
இது சில்லறை பிரச்சினைகள் தொடங்கி ஏகப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இப்போது யுபிஐ பேமெண்ட் முறையை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கார்டு பேமெண்ட் முறை பல காலமாக இருந்தாலும் கூட அதை விட இப்போது யுபிஐ முறை பிரபலமடைந்து விட்டது.

என்னதான் UPI பேமெண்ட் தளங்கள் தற்போது அதிகரித்துவிட்டாலும் வங்கிகளில் இருந்து அவ்வப்போது பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பெரிய தொகை தேவைப்பட்டால், உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் படிக்கத் தெரியாதவர்களுக்கு வங்கி சலானை நிரப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது, இதில், பலர் அருகில் இருப்பவரிடம் உதவி கேட்டு சலானை நிரப்பிக் கொள்வார்கள். இருப்பினும் சிலர், தவறாக படிவத்தை நிரப்புவார்கள். அந்தமாதிரியான ஒரு பெண்ணின் செக்தான் தற்போது வைரலாகி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. @smartprem19 என்ற இன்ஸ்டா பக்கத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்துடன் கூடிய வீடியோவில், அந்த பெண்ணின் பெயர் சங்கீதா என்று செக்கில் எழுதப்பட்டுள்ளது. IDBI என்ற வங்கி காசோலையில் தேதி எழுதும் இடத்தில் டிசம்பர் 26, 2024 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொகையை வார்த்தைகளில் எழுத வேண்டிய இடத்தில், தொகையை எழுதுவதற்கு பதிலாக "வங்கியில் எவ்வளவு பணம் உள்ளதோ" என்று கேட்டு எழுதியுள்ளார்.
இந்த காசோலை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 13,000 பார்வைகளை கடந்துள்ளநிலையில், நெட்டிசன்கள் சங்கீதா குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். "சங்கீதா என்ன செய்தாள்.. மொத்த வங்கியையும் காலி செய்தாள்!" என்று கிண்டலாக கூறியுள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு பலர் கேலியாக கமெண்ட் செய்துள்ளனர். மற்றொருவர் இந்த செக்கை பார்த்த மொத்த வங்கி ஊழியர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications