ஹரியானாவை தொடர்ந்து உ.பி.. ரூ.1.25 லட்சத்தில் இஸ்ரேலில் வேலை.. யோகி அரசு அழைப்பு..

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகையில் இஸ்ரேல் நாட்டில் கட்டுமானப் பணியாளர்கள் வேலை செயவதற்கான அறிவிப்பை அண்மையில் ஹரியானா அரசு வெளியிட்டிருந்தது. இஸ்ரேலுக்கு 10,000 கட்டுமானப் பணியாளர்கள் தேவை என்றும் மாதம் ரூ.1.34 லட்சம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தது.

இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியபோதும் ஹரியானா அரசை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் இப்போது இஸ்ரேல் நாட்டில் வேலைபார்க்கத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாதச் சம்பளம் ரூ.1.25 லட்சம் என்றும் உத்தரப்பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.

ஹரியானாவை தொடர்ந்து உ.பி.. ரூ.1.25 லட்சத்தில் இஸ்ரேலில் வேலை.. யோகி அரசு அழைப்பு..

இஸ்ரேலில் கட்டுமானப் பணியாளர்களுக்கான வேலைக்கு ஆட்கள் அவசரத் தேவையிருப்பதாக உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேஸ்திரி உள்பட கட்டுமானப் பணியாளர்கள், டைல்ஸ் தொழிலாளர்கள், பூச்சுத் தொழிலாளர்கள், கம்பி கட்டும் தொழிலாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பு இந்தியாவின் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் பல்வேறு நிலைகளுக்கான வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். அத்துடன் ரூ.15,000 மாதாந்திர போனஸாக வழங்கப்படும்.

இந்த வருவாய் ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பணிக்காலம் முடிந்தபின்னர் பணியாளர்களிடம் தரப்படும். இஸ்ரேலும் இந்தியாவும் முன்னெடுத்துள்ள ஒரு கூட்டு முயற்சியில் இஸ்ரேலில் 42,000 இந்தியர்களை வேலைக்கு எடுப்பது எனவும் இதில் 34,000 பேர் கட்டுமானத் தொழிலாளர்கள் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இஸ்ரேல் நாட்டில் கடும் தொழிலாளர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் வேலை பார்ப்பதற்காக பாலஸ்தீனியர்களுக்கு தரப்பட்டிருந்த வேலை பெர்மிட்டை இஸ்ரேல் ரத்து செய்யவிட்டதால் இந்த ஆட்கள் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது இஸ்ரேலில் இந்தியர்களுக்கு வழங்கும் வேலைவாய்ப்புகளைத் துரிதப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே இஸ்ரேல் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்டுமானப் பணியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். தட்கல் பாஸ்போர்ட் தேவைப்பட்டால் அரசு உதவி செய்யும்.

ஒன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு இஸ்ரேலில் வேலை இருக்கும். அதேபோல் இதற்கு முன்னர் அவர்கள் யாரும் இஸ்ரேலில் வேலை பார்த்திருக்கக்கூடாது. 21 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+