மத்திய வருமான வரித்துறை சமீபத்தில் கேரளா, உத்தர பிரதேசம் என பல மாநிலங்களில் இருக்கும் யூடியூபர்களின் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களின் ஸ்டூடியோ-க்களில் சோதனை செய்தது கன்டென்ட் கிரியேட்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் வருமான வரித்துறை தற்போது ஒரு யூடியூபர்-க்கு 2.6 கோடி வருமான வரி பாக்கி உள்ளது என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் குர்ஜா பகுதியில் இருக்கும் புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்த மகாராணா பிரதாப் சிங் யூடியூப் நியூஸ் போர்ட்டல் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனல் வாயிலாக மாதத்திற்கு சுமார் 20,000 ரூபாய் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் மகாராணா பிரதாப் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வருமான வரி துறையிடம் இருந்து நோட்டீஸைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மகாராணா பிரதாப் சிங்-கிற்கு கடந்த 4 வருடத்திற்கு 2.6 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுக்குறித்து பிரதாப் சிங் தனது தணிக்கையாளரிடம் விசாரிக்கும் போது, அவரின் பான் கார்டு கீழ் தெலுங்கானாவில் ஒன்று, டெல்லியில் 5, உத்தரபிரதேசத்தில் ஒன்று மொத்தம் 7 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த 7 நிறுவனங்களுக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என மகாராணா பிரதாப் சிங் கூறும் இதேவேளையில், தனது பான் கார்டு விபரத்தை திருடி இந்த வேலையை பார்த்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதுக்குறித்து மகாராணா பிரதாப் சிங் தான் வசிக்கும் புலந்த்ஷாஹர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் அவருடைய தணிக்கையாளர் வாயிலாக வருமான வரித்துறை முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜிஎஸ்டி அமைப்பிடம் முறையாக 7 போலி நிறுவனத்திடம் புகார அளிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்த பதிலுக்காக பிரதாப் சிங் காத்திருக்கிறார்.
இதோடு 2.6 கோடி ரூபாய்க்கான வருமான வரி நோட்டீஸ் குறித்து பிரதாப் சிங் கூறுகையில் என்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்தால் கூட இந்த வரி நிலுவையை செலுத்த முடியாது. மேலும் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் காவல் துறை அனைத்து ஆவணங்களையும் செக் செய்துவிட்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications