தொழில் உலகில் பல்வேறு இளம் பெண்களும் மிக திறமையான முறையில் செயல்பட்டு சாதித்து வருகின்றனர். அப்படி மூன்றாம் தலைமுறை தொழில் முனைவோராகவும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மனைவியாகவும் இருக்கும் ஒருவர் பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரான ராம் சரணின் மனைவி தான் உபாசனா கமினேனி கொனிடெலா. ராம் சரணின் மனைவி என்பது மட்டுமே இவரது அடையாளம் கிடையாது. இவர் அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ குழுமம் தான் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ். இதனை நிறுவியவர் பிரதாப் ரெட்டி. இந்த பிரதாப் ரெட்டியின் பேத்தி தான் உபாசனா.

தற்போது இவர் சிஎஸ்ஆர் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் துணை தலைவராக செயல்பட்டு வருகிறார் . இந்த குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 98 , 320 கோடி ரூபாய் ஆகும். 34 வயதாக கூடிய உபாசனா அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தில் பல்வேறு சமூக நலம் சார்ந்த முயற்சிகளை முன்னெடுப்பவராக இருந்த வருகிறார். இவரது தாயார் ஷோபனா அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு துணை தலைவராக செயல்பட்டு வருகிறார்.
அது மட்டும் இன்றி உபாசனா யூஆர்லைஃப் (URLife) என்ற ஒரு உடல் நலம் சார்ந்த தளத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த தளம் உடல் நலன், மன நலன், ஊட்டச்சத்து உள்ளிட்ட அடிப்படை ஆரோக்கிய சேவைகளை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வெபினார்கள், பயிற்சிகள், உணவு முறைகள் என பல விஷயங்களை நாம் இந்த தளத்தின் மூலம் பெற முடியும்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரணை திருமணம் செய்து கொண்டார். உபாசனாவை பொருத்தவரை லண்டனில் இருக்கும் லெஜண்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பை முடித்தவர் .அதுமட்டுமின்றி ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் மேலாண்மை படித்திருக்கிறார். இவர் ஃபேமிலி ஹெல்த் பிளான் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான சைடஸ் குழுமத்தின் வாரியக் குழு உறுப்பினராகவும் உபாசனா இருந்து வருகிறார். உபாசனா - ராம்சரண் ஜோடியை பொறுத்தவரை இந்தியாவின் பணக்கார ஜோடிகளில் ஒன்றாக இருக்கிறது.
இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2500 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. பெண்கள் தொழில்முனைவோராக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இவர் செயல்பட்டு வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications