இந்தியாவில் கார் என்பது ஆடம்பர பொருள் என்பதை கடந்து தற்போது அடிப்படையாக தேவைப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் உருவாகியுள்ள இந்த மாற்றத்தை பணமாக்க வேண்டும் என்பதில் குறியாய் உள்ளது.
இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய ஆட்டோமொபைல் சந்தை என்றாலே எப்போதும் பட்ஜெட் கார்களுக்கு மட்டும் தான் மவுசு இருக்கும் என்ற எண்ணம் மாறி இப்போது ப்ரீமியம் கார்களுக்கான வர்த்தகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவுக்கு மீண்டும் வர திட்டமிட்டு உள்ளது.

இதனால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் பழைய மாடல்களுக்கான டிமாண்ட், மதிப்பு ஆகியவை வேகமாக குறைய துவங்கியுள்ளது. இதனால் புதிய கார் வாங்கும் திட்டம் உங்களுக்கு இருந்தால் அடுத்த சில மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் கார்களை தெரிந்துக்கொண்டு அதன் பின்பு புக் செய்யுங்கள்.
இந்தியாவில் இப்போது SUV மார்கெட் என்பதால் 2023 முடியும் வரையில் செடான் கார்கள் அறிமுகமில்லை என்பது செடான் ரசிகர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. தற்போது அடுத்த சில மாதத்தில் அறிமுகமாகும் புதிய கார்கள் என்ன..? இதன் விலை என்ன என்பதை மட்டும் ஷாட் அண்ட் ஸ்வீட் ஆக பார்க்கப்போகிறோம்.
Volkswagen Taigun Sport: இந்தியாவில் எப்போதும் வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் வேளையில், இந்நிறுவனம் சமீபத்தில் அறிகமுகம் செய்த Volkswagen Taigun காரின் ஸ்போர்ட் GT வெர்ஷன்-ஐ ஜூன் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை 21.10 லட்சம் ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Maruti Suzuki Invicto: இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி, டோயோட்டோ உடன் செய்த ஒப்பந்தம் கீழ் அதன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னோவா காரின் மறு உருவமாக Maruti Suzuki Invicto காரை 25 முதல் 30 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி கிசாஷி கார்-க்கு பின்பு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் புதிய கார் அறிமுகம் செய்கிறது.
Hyundai Exter: ஹூண்டாய் தனது விற்பனையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக Exter என்னும் பட்ஜெட் விலை SUV கார்-ஐ வெறும் 6.00 - 10.00 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 10ஆம் தேதி Hyundai Exter கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Honda Elevate: செடான் பிரிவில் முடிசூடா மன்னனாக இருக்கும் ஹோண்டா எஸ்யூவி கேம்-க்குள் நுழையும் ஒரு டிரம்ப் கார்டு தான் இந்த Honda Elevate, ஜூலை மாதம் விற்பனைக்கு கொண்டு வரும் இந்த காரின் விலை 10.00 - 17.00 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tata Punch CNG: இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்துக் கொண்ட டாடா மோட்டார்ஸ்-ன் பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன் 8.45 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரும் ஜூலை மாதம் அறிமுகமாக உள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications