பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் ஐபிஓ வெளியீட்டின் மதிப்பீடுகளை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக ஸ்விக்கி ஐபிஓ வெளியிடுவதாக இருந்த ஐபிஓ விலையானது தற்போது 12.5 பில்லியன் டாலரிலிருந்து 13.5 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இது 14 பில்லியன் டாலரிலிருந்து 15 பில்லியன் டாலர் இலக்கை கொண்டிருந்தது.
தற்போது 10 முதல் 16 சதவீதம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் அக்டோபர் 30 ஐபிஓ நடத்த ஸ்விக்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் இந்தியாவின் இரண்டாவது பெரிய பங்குச் சலுகையாகும். முதலாவதாக இந்த வாரத்தில் ஹூண்டாய் இந்தியா அறிமுகமானது.

சமீப காலமாக பங்குச் சந்தை ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கம் மற்றும் ஐபிஓக்களில் ஏற்பட்ட சரிவு ஆகியவை ஸ்விக்கி ஐபிஓ குறைந்த மதிப்பீட்டை கொண்டுவர காரணமாகின. ஏனெனில் முதலீட்டாளர்கள் பெரிதாக ஆர்வம் செலுத்தமாட்டார்கள் என நிறுவனம் நம்புவதாக இந்த விஷயத்தைப் பற்றிய தெரிந்த ஆதாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போது நிஃப்டி குறியீடு தொடர்ந்து 4 வாரங்கள் நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்ந்து வெளிநாட்டு விற்பனையின் காரணமாக கடந்த செப்டம்பர் 27 அன்று பதிவான உயர்விலிருந்து 7.15% குறைந்துள்ளது.
இதற்கிடையில், ஹூண்டாய் இந்தியா பங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தையில் அறிமுகமானபோது 7.2% சரிவை பதிவு செய்தன. சில்லறை முதலீட்டாளர்கள் உயர்ந்த மதிப்பீடுகள், வாகனத் துறையின் மந்தநிலை பற்றிய கவலைகள் ஆகியவற்றால் மந்த நிலை அடைந்துள்ளது.
எனவே, ஸ்விக்கி நவம்பர் 13 ஆம் தேதி மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்றும், அதற்கு முந்தைய வாரத்தில் ஐபிஓவைத் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றன. இந்த தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவின் ஐபிஓ சந்தை இந்த ஆண்டு ஏற்கனவே சுமார் 270 நிறுவனங்கள் 12.57 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட 7.4 பில்லியன் டாலர்களை விட அதிகமாகும். ஸ்விக்கி அக்டோபர் 30 முதல் பல இந்திய நகரங்களில் பங்குகளை வழங்குவதற்கான ரோடு ஷோவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்விக்கி இந்தியாவின் ஆன்லைன் உணவகம் மற்றும் கஃபே உணவு விநியோகத் துறையில் ஜொமாட்டோ உடன் போட்டியிடுகிறது. இந்த இரு நிறுவனங்களும் 10 நிமிடங்களில் விரைவான வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் அழைக்கப்படுவதில் பெரும் சவால்களைச் செய்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications