பெரும்பாலானோர் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் இந்திய தேசியக்கொடுப்பனவு கழகம் 2025-ஆம் ஆண்டின் ஜூலை 31-ஆம் தேதி முதல் யுபிஐ-யில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. பெட்டிக்கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைத்திலும் தற்போது யுபிஐ பேமெண்ட் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில் அதன் செயல் திறனை மேம்படுத்தவும், அதிகரித்த பரிவர்த்தனை காரணமாக ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், மோசடிகளின் அபாயங்களைக் குறைக்கவும் பல முயற்சிகளை NPCI செய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் சில மாற்றங்களை செய்யவுள்ளது.
நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள்: புதிய விதிமுறைகளின் படி யுபிஐ பயன்படுத்தும்போது சில நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் விதிக்கப்பட உள்ளது. பேலன்ஸ் விசாரணைகள் ஒரு நாளைக்கு 50 ஆகக் குறைக்கப்படும். அதுவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் உச்ச நேரங்களில் பேலன்ஸ் விசாரணைகள் மற்றும் ஆட்டோ பே போன்றவை அனுமதிக்கப்படாது.

ஆட்டோ பே வசதி இது போன்ற உச்ச நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் செயல்படும். இந்த கட்டுப்பாடுகள் யுபிஐ அமைப்பின் தேவையற்ற சுமையைக் குறைக்கவும், பயனர்கள் டிஜிட்டல் கட்டணங்களைப் பயன்படுத்தும் போது சிறந்த அனுபவத்தை பெறுவதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளன. வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குனர்கள் ஜூலை 2025-ஆம் ஆண்டின் 31-ஆம் தேதிக்குள் இந்த விதிமுறைகளுக்கு இணங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல ஒரே கணக்கு பரிவர்த்தனைகளும் தடை செய்யப்படுகிறது. யுபிஐ அமைப்பின் தவறான பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பணம் செலுத்துபவரும், பணம் பெறுபவரின் கணக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில் NPCI இதுபோன்ற பரிவர்த்தனைகளைத் தடை செய்யவுள்ளது. இந்த வகையான பரிவர்த்தனைகள் உண்மையிலேயே யாருக்கும் நிதியை அனுப்பாமல் கேஷ்பேக் பெறுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே கணக்கு பரிவர்த்தனைகளை தடை செய்தால் UPI அமைப்பில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.
பரிவர்த்தனையின் செயலாக்கத்தை சீரமைக்கும் விதமாக அனைத்து யுபிஐ ட்ரான்ஸ்சாக்சன் ஐடிகளும் 35 எழுத்துக்கள் நீளமாக இருக்க வேண்டியும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுவும் இந்த யுபிஐ ட்ரான்ஸ்சாக்சன் ஐடி இனிமேல் நம்பர் மற்றும் எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கும். இதில் எந்தவித ஸ்பெஷல் கேரக்டர்களும் இருக்கக் கூடாது என்றும் NPCI உத்தரவிட்டுள்ளது. முக்கியமாக இந்த அம்சம் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கவும் செயல்படுத்தப்படவுள்ளது.இந்த மாற்றங்கள் அனைத்தும் யுபிஐ-யின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பயனர்களுக்கு சுமூகமான பரிவர்த்தனை அனுபவத்தை வழங்கவும் செய்யப்படவுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications