சென்னை: ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 14ஆம் தேதி உடன் முடிவடைய இருக்கிறது. ஆதார் அட்டை இந்தியர்களின் முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக செயல்படுகிறது.
நம்முடைய புகைப்படச் சான்றாகவும், பிறந்த தேதிக்கான சான்றாகவும், முகவரிக்கான சான்றாகவும் ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. எனவே அவ்வப்போது முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்து ஆதாரை புதுப்பித்து கொள்வது கட்டாயமாகியுள்ளது. மக்கள் எளிதாக ஆன்லைன் வாயிலாகவே இந்த மாற்றங்களை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்படுத்தி தந்துள்ளது.

ஆதார் இணையதளத்தில் மக்கள் குறிப்பிட்ட சில மாற்றங்களை இலவசமாகவே செய்து கொள்ள முடியும். வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு மக்கள் இதற்கு கட்டணம் செலுத்தி ஆக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டவர்கள் மற்றும் இதுவரை அதனை புதுப்பிக்காமல் இருப்பவர்கள் உடனடியாக ஆன்லைனில் தங்களுடைய தகவல்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் தங்களுடைய விவரங்களை ஆன்லைனில் இலவசமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம், இதற்கான காலகேடு டிசம்பர் 14ஆம் தேதி வரை தேதியுடன் முடிவடைகிறது . டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு மக்கள் தங்கள் ஆதார் கார்டில் எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றாலும் அதற்கு கட்டணம் செலுத்தி ஆக வேண்டும். ஏற்கனவே தனித்துவ அடையாள ஆணையம் இவ்வாறு மக்கள் தங்களுடைய விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கு செப்டம்பர் 14ஆம் தேதியை கடைசி நாளாக நியமனம் அறிவித்திருந்தது. பின்னர் அது இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 வரை மக்கள் இலவசமாக தகவல்களை அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
இதற்கு இன்னும் பத்து நாட்களே இருப்பதால் ஆதார் அட்டையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு https://myaadhaar.uidai.gov.in/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓ டி பி உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனை அடுத்து உங்களுடைய சுய விவரங்கள் அனைத்தும் அந்த பக்கத்தில் காண்பிக்கும். உங்களுடைய தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் இதில் உங்களுடைய முகவரி அல்லது எந்த தகவலை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து அதற்கு பொருத்தமான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் சப்மிட் செய்ய வேண்டும்.
டிசம்பர் 14ஆம் தேதி வரை இவற்றை இலவசமாக மேற்கொள்ளலாம்.
டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும்போது 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுவாக ஆதாரில் இருக்கும் விபரங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் வாக்காளர் அடையாள அட்டை ,இருப்பிட சான்றிதழ் ,பாஸ்போர்ட் அல்லது வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம். ஆதாரில் இருக்கும் நம்முடைய கருவிழி ,கைரேகை, மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் ஆகியவற்றை இ சேவை மையங்களில் மட்டுமே மாற்ற முடியும். பெயர் , முகவரி மாற்றம் போன்றவற்றை எளிதாக நம் வீட்டில் இருந்து செய்து கொள்ளலாம்.
Written by: Devika
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications