சென்னை: தமிழகத்தின் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஒன்று. ரேஷன் கடைகளில் மட்டும் இன்றி அரசு வழங்கிடும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பொது மக்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படாமல் இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது தோராயமாக 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்னும் ரேஷன் அட்டை வழங்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுமா? வழங்கப்படாதா? என வெளிப்படையாக அறிவிக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி அரசு வழங்கும் உதவி தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமாகும்.
சமீபத்தில் நடைமுறைக்கு வந்த மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் மாதந்தோறும் 1000 ருபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டதை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் சென்ற ஜுலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. மேலும், இதனால் குழப்பத்தில் உள்ள மக்கள் புதிய ரேஷன் கார்டு தங்களுக்கு கிடைக்க பெறுமா? இல்லையா? என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதுவரை சராசரியாக 2 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் 80 ஆயிரம் பேருக்கு புதிய அட்டை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ள போதும் இன்னும் யாருக்கும் புதிய ரேஷன் அட்டை சென்று சேரவில்லை என்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கான வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று முறையாக புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த போதிலும் தங்களுக்கான ரேஷன் கார்டு ஒரு வருட காலமாக வராமல் இருப்பது குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து உணவு வழங்கல் துறை மற்றும் வட்ட வழங்கல் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று விசாரித்தும் எந்த விதமான முறையான பதில்களும் கிடைக்கப் பெறவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ள பொதுமக்கள், தங்களுக்கான புதிய ரேஷன் அட்டை எப்போது கிடைக்கும் என்ற வெளிப்படையான தகவலை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையொட்டி புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கூறுகையில், ஒரு வருட காலமாக இந்த புதிய ரேஷன் அட்டைகளுக்காக காத்திருப்பதாகவும், ஏற்கனவே பதிவு செய்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் ரேஷன் அட்டை வழங்கப்படாமல் இருப்பது வியப்பாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள மக்களுக்கு ரேஷன் அட்டை வழங்கிட உத்தரவிடுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications