உங்களது ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழில் (Registration Certificate) இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை நீங்கள் புதுப்பித்துவிட்டீர்களா?. ஏனெனில், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், இந்த முக்கிய ஆவணங்களுடன் சரியான மற்றும் தற்போதைய பயன்பாட்டில் இருக்கும் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இது, இன்றைய டிஜிட்டல் உலகில் உங்களது வாகனப் பாதுகாப்பு மற்றும் சேவைக்கான மிக அத்தியாவசிய தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொபைல் எண் இணைப்பு ஏன் அவசியம்..?: ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.யில் தொலைபேசி எண்ணைப் புதுப்பிப்பது ஏன் இவ்வளவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது தெரியுமா..? மத்திய அரசின் போக்குவரத்துத் துறை பல முக்கியமான சேவைகளை முற்றிலும் இந்த எண்ணின் அடிப்படையிலேயே வழங்கி வருகிறது.

முக்கிய அறிவிப்புகள் : போக்குவரத்துத் துறை உங்களின் வாகனத் தொடர்பான அத்தியாவசிய தகவல்களை தவறாமல் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே அனுப்புகிறது. குறிப்பாக, இன்சூரன்ஸ் முடிவு தேதி, சாலை வரி செலுத்துவதற்கான நினைவூட்டல், மாசுக் கட்டுப்பாடு புதுப்பிப்புத் தேதி, போக்குவரத்து அபராதம் போன்றவற்றை உடனடியாக தெரிந்துகொள்ளச் சரியான மொபைல் எண் இணைந்திருப்பது கட்டாயமாகும். இதனால் தேவையற்ற அபராதங்களை உங்களால் தவிர்க்க முடியும்.
OTP அடிப்படையிலான ஆன்லைன் சேவைகள் : இன்றைய தேதியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) வழங்கும் பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் முறையில் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலமாகவே இயங்குகின்றன. வாகன ஆவணங்களில் பெயர் அல்லது முகவரி திருத்தம், டூபிளிகேட் லைசன்ஸ் பெறுதல், மொபைல் எண் சரிபார்ப்பு போன்ற முக்கியமான சேவைகளுக்கு பழைய அல்லது தவறான எண் இருந்தால், உங்களால் OTP-யைப் பெற முடியாது. இதனால், அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் தாமதம் அல்லது தடை ஏற்படக்கூடும்.
ஆவணப் பாதுகாப்பு : தவறான அல்லது செயல்படாத தொலைபேசி எண் உங்கள் ஆவணங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். அதாவது, வேறு யாரேனும் உங்கள் ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சேவைகளை அல்லது ஆவண சேதங்களை செய்ய முயற்சிக்கும்போது, சரியான மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், உடனடியாக எச்சரிக்கை குறுஞ்செய்தி உங்களுக்கு வந்துவிடும். இதனால் வாகன உரிமம் தொடர்பான மோசடிகளைத் தடுக்கவும், உங்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் முடியும்.
டிஜிட்டல் பயன்பாடுகள் : மத்திய அரசின் DigiLocker அல்லது mParivahan போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளில் உங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.யை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க சரியான மொபைல் எண் இணைப்பு தேவை. அப்போதுதான் போக்குவரத்துத் துறை அல்லது காவல்துறையினர் சரிபார்க்கும்போது உங்களால் உடனடியாக ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications