upGrad க்கு சொந்தமான நிறுவனத்தில் இது இரண்டாவது முறையாக பணிநீக்கம் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் Edtech நிறுவனங்கள் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் காரணத்தால் 2022 ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகிறது.
லாக்டவுன் காலத்தில் இந்த டிஜிட்டல் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனங்கள் தான் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று வந்தது. ஆனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் EDTECH பிரிவில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
டெக் நிறுவனங்களே ரெசிஷன் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் 2வது ரவுண்டு பணிநீக்கத்தை அறிவித்து வரும் வேளையில் EDTECH நிறுவனங்கள் எம்மாதிரம்.
upGrad Campus பணிநீக்கம்
மார்ச் 2021ல் upGrad நிறுவனம் சுமார் 150 கோடி ரூபாய் தொகைக்கு Impartus Innovations நிறுவனம் கைப்பற்றப்பட்டது. upGrad Campus என்பது Impartus Innovations நிறுவனத்தின் புதிய பெயராகும். இம்பார்டஸ் இணை நிறுவனர் அமித் மகேன்சாரியா, துணை நிறுவனமாக இயங்கி வந்த upGrad Campus தலைமை இயக்க அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
120 ஊழியர்களை பணிநீக்கம்
upGrad Campus பிரிவு வீடியோ கல்வி சேவை அளிக்கும் நிறுவனமாக இருக்கும் வேளையில் 300 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனத்தில் சுமாக் 120 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சுமார் 30 சதவீத ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஹரப்பா கல்வி நிறுவனம்
upGrad க்கு சொந்தமான நிறுவனத்தில் இது இரண்டாவது முறையாக பணிநீக்கம் அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளது. ஜனவரி மாதம் upGrad நிறுவனம் ஜூலை 2022 இல் ரூ.300 கோடிக்கு கையகப்படுத்தப்பட்ட ஹரப்பா கல்வி நிறுவனம், அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 30 சதவீத பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
60 ஊழியர்களை பணிநீக்கம்
இந்த பணிநீக்கம் மூலம் ஹரப்பா கல்வி நிறுவனத்தில் கிட்டத்தட்ட 60 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஹரப்பா கல்வி நிறுவனத்தில் 60 ஊழியர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் 30 சதவீதம் என்பது பெரிய எண்ணிக்கை.
அனாகாடமி-யின் Relevel
இதுதவிர, மற்றொரு எட்டெக் நிறுவனமான அனாகாடமி நடத்தும் Relevel நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 20 சதவீதத்தை ஜனவரியில் பணிநீக்கம் செய்தது. இந்நிறுவனம் கல்வி வணிகத்தில் இருந்து தனது கவனத்தை "tests product" மற்றும் NextLevel என்ற புதிய செயலிக்கு தனது கவனத்தை திருப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பணிநீக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச பொருளாதாரம்
சர்வதேச பொருளாதாரம் அதிகப்படியான தடுமாற்றத்தையும் பாதிப்பையும் எதிர்கொண்டு இருக்கும் வேளையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.
புதிய முதலீடுகள்
இதனால் முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டை வளர்ச்சி வாய்ப்புகள் நிறைந்த, அதிலும் குறிப்பாக உடனடியாக லாபம் அளிக்க கூடிய நிறுவனத்தில் தான் முதலீடு செய்து வருகிறது. இதனால் எட்டெக் துறையில் இருக்கும் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை பெற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
பணிநீக்கம்
இந்த நிலையில் முதலீடுகளை பெற முடியாமல் நிதி நெருக்கடியில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் நிறுவனத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காக செலவுகளை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications