யுனிபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும் யுபிஐ இந்தியாவில் மிகவும் பிரபலமான பேமெண்ட் வழிமுறையாக உள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் 2016 ஆம் ஆண்டு யுபிஐ உருவாக்கப்பட்டது. இந்தியர்கள் இதன் மூலம் டிஜிட்டல் முறையில் எளிதாக பணம் அனுப்புவதும் பெறுவதும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக யுபிஐ பேமெண்ட் முறைகளில் பல்வேறு மாற்றங்களை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா செய்துள்ளது. யுபிஐ பேமெண்ட் முறையில் ஜனவரி மாதத்தில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் புதிய விதிகள் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.

யுபிஐ டிரான்ஸாக்ஷன் லிமிட் உயர்த்தப்பட்டுள்ளது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், யுபிஐ பேமெண்ட் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக டிசம்பரில் அறிவித்திருந்தார். இதன் மூலம்
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதற்கு இது வசதியாக இருக்கிறது. யுபிஐ பேமெண்ட்டை ஆன்லைனில் செலுத்துவதற்கு கூடுதல் வசதிகளை செய்யவிருப்பதாக மாதமிருமுறை மானிட்டரி பாலிஸி கமிட்டி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த யுபிஐ ஐடிக்கள் டீஆக்டிவேட் செய்யப்பட திட்டமிடப்பட்டன. கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற ஆப்களுக்கும் வங்கிகளுக்கும் ஓராண்டுக்கு மேலாக செயல்படாமல் உள்ள யுபிஐ ஐடிக்களை டீஆக்டிவேட் செய்யுமாறு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உத்தரவிட்டது.
2023 டிசம்பர் 31க்குள் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால் உங்களது செயல்படாத அக்கவுண்ட் இந்நேரம் டீஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.
வங்கிகளில் தங்களது பழைய செல்போன் நம்பர்களை மாற்றாமல் புதிய நம்பர்களை பயன்படுத்தி பேமெண்ட்களை செலுத்தினால் அதை வேறு யாருக்காவது போய்ச் சேர வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ரூ.1 லட்சம் வரையிலான யுபிஐ ஆட்டோ பேமெண்ட்களுக்கு யுபிஐ ஆத்தன்டிகேஷன் தேவையில்லை. இதுதொடர்பாக அண்மையில் ரிசர்வ் வங்கி கூறுகையில், சில நேரங்களில் ரூ.1 லட்சம் வரையிலான யுபிஐ பேமெண்ட்களுக்குக் கூடுதலாக ஆத்தன்டிபிகேஷன் தேவையில்லை.
மியூச்சுவல் பண்டு சந்தா, இன்சூரன்ஸ் பிரீமியம், கிரெடிட் கார்டு தவணைகளை செலுத்துவதற்கு ஏதுவாக பேமெண்ட் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ரூ.15,000 வரை டிரான்ஸ்பர் செய்வதற்கு எந்தவித ஆத்தன்டிகேஷனும் தேவையில்லை என இருந்தது.
தற்போது அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டு ரூ.5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மிகவும் பயன்படும்.
இப்போது மக்கள் பெருமளவில் யுபிஐ மூலம் பேமெண்ட்களை செய்து வரும் நேரத்தில் இந்த அறிவுப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
யுபிஐ லைட் வேலட்கள் பரிவர்த்தனை வரம்பு ரூ.200லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது. அதிகபட்சம் ரூ.2000 டிரான்ஸ்பர் செய்யலாம். இணையத் தொடர்பு சரிவர இல்லாத பகுதிகளில் யுபிஐ லைட் வேலட் உள்ளவர்களை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
சில வியாபாரிகள் செலுத்தும் யுபிஐ பேமெண்ட்களுக்கு 1.1 சதவீதம் இன்டர்சேஞ்ச் கட்டணம் விதிக்கப்படும் என்று என்பிசிஐ அறிவித்துள்ளது. ஆன்லைன் வேலட் போன்ற ப்ரீபெய்டு பேமெண்ட் முறைகள் மூலம் ரூ.2000க்கு மேல் செலுத்தினால் இந்த கட்டணம் பொருந்தும்.
ஆன்லைன் மோசடிகளை தடுக்க புதிய நபர்களுக்கு ரூ.2000க்கு மேல் பணம் அனுப்பப்படும்போது 4 மணி நேரம் வரம்பை ரிசர்வ் வங்கி பயனாளிகளுக்கு நிர்ணயிக்கலாம் எனக் கூறியுள்ளது. இதுவரை பணம் அனுப்பப்படாத புதிய நபருக்கு பயனாளர்கள் முதன்முறையாக ரூ.2000க்கு மேல் பணம் அனுப்பினால் இந்த 4 மணிநேர வரம்பு பொருந்தும். அதாவது 4 மணிநேரம் கழித்துதான் பணம் சென்றடையும்.
யுபிஐ ஃபார் செகண்டரி மார்க்கெட் திட்டத்தை பீட்டா வெர்ஷனில் என்பிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி இந்த யுபிஐ செகண்டரி மார்க்கெட் திட்டப்படி யுபிஐ பேமெண்ட்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
யுபிஐ செகண்டரி மார்க்கெட் வசதி என்பது இது வர்த்தகத்திற்கான ஒரு குறிப்பிட்ட அளவு நிதியைத் தடுப்பதாகும். இதன் மூலம் முதலீட்டாளரிடம் போதுமான நிதி உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. இது வர்த்தக செயல்முறையை நெறிப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த வசதி மிகவும் திறமையாகவும் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்பவும் செயல்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications