இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் வளர்ச்சி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2023-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலமாக 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 23.5 லட்சம் கோடியாகும். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் UPI அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பரிவர்த்தனைகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றுள்ளது. பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய மிகப் பெரிய மாற்றத்தை இது குறிக்கிறது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட தரவுகளின் படி , செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனை அளவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்தத் தொகையின் மதிப்பு 14 சதவிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், தினசரி 53.5 கோடி UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையின் மதிப்பு தினசரி அளவில் ரூ. 75,801 கோடியாகும்.

அக்டோபர் மாதத்தில் இம்மிடியேட் பேமெண்ட் சர்வீஸ் (IMPS) பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாதத்தில் IMPS பரிவர்த்தனைகள் 9% அதிகரித்து 46.7 கோடியை எட்டியுள்ளது. பரிவர்த்தனை மதிப்பு 11% அதிகரித்து ரூ. 6.29 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
FASTag பரிவர்த்தனைகளும் UPI பரிவர்த்தனை வளர்ச்சிக்கு பெரும் பங்காளித்துள்ளன. அக்டோபரில் FASTag பரிவர்த்தனைகள் 8 சதவீதம் உயர்ந்து 34.5 கோடியை எட்டியுள்ளது. பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு ரூ.6,115 கோடியாக உள்ளது. இந்த மதிப்பு செப்டெம்பர் மாதத்தில் ரூ. 5,620 கோடியாக இருந்தது.
ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையும் (AePS) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. செப்டம்பர் மாதம் செய்யப்பட்ட 10 கோடி பரிவர்தனையுடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் 26% அதிகரித்து 12.6 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட்களின் பங்கு விலை மார்ச் 2021-ஆம் ஆண்டில் 14 சதவீதம் முதல் 19 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 2024-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 40% முதல் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு UPI முக்கிய பங்கு வகிக்கிறது. 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் UPI பரிவர்த்தனைகளின் அளவு 52 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் UPI பரிவர்த்தனை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு 40 சதவீதம் அதிகரித்து ரூ.116.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்த 83.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications