இந்தியாவில் கடந்த சில வருடங்களாக யூபிஐ பேமெண்ட் சேவையை மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் காரணத்தால் சாலையோர கடைகள் முதல் ஓடும் பஸ் வரையில் யூபிஐ பேமெண்ட் வசதி வந்துள்ளது. இதன் வாயிலாக 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் யூபிஐ மற்றும் கார்டு பேமெண்ட் மூலம் சுமார் 149.5 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
UPI பேமெண்ட் சேவை மூலம் எளிதாக ஒருவர் QR கோடு ஸ்கேன் செய்து அனைத்து விதமான நிதி பரிமாற்றம் செய்ய முடிந்தாலும் இதில் சைபர்கிரைம் பாதிப்பும் உருவாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் யூபிஐ சார்ந்த மோசடிகள் நாட்டின் பல பகுதிகளில் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட தொகை வரையில் மட்டுமே யூபிஐ மூலம் செலுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த ஒரு நாள் லிமிட்-ஐ வங்கிகள் NPCI டிஜிட்டல் பேமெண்ட் சேவையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு இணங்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
NPCI விதிமுறைப்படி ஒரு நாளுக்கு ஒருவர் அதிகப்படியாக 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை யூபிஐ மூலம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் இந்த அளவீடு ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது, கனரா வங்கியில் ஒரு நாளுக்கு ஒரு நபரின் யூபிஐ பண பரிமாற்ற லிமிட் வெறும் 25000 ரூபாய் மட்டுமே. இதேபோல் பிற வங்கிகளில்..?
- கனரா வங்கி - 25000 ரூபாய்
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 1 லட்சம் ரூபாய்
- ஹெச்டிஎப்சி வங்கி - 1 லட்சம் ரூபாய், இவ்வங்கியில் சில வாடிக்கையாளர்களுக்கு 5000 ரூபாய் லிமிட் செட் செய்யப்பட்டு உள்ளது
- ஐசிஐசிஐ வங்கி - 1 லட்சம் ரூபாய்
- ஆக்சிஸ் வங்கி - 1 லட்சம் ரூபாய்
- பாங்க் ஆப் பரோடா - 25000 ரூபாய்
NPCI அமைப்பு நிதி பரிமாற்ற அளவில் மட்டும் அல்லாமல் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடு விதித்துள்ளது. புதிய விதிமுறைகள் படி ஒரு நாளுக்கு அதாவது 24 மணிநேரத்திற்கு அதிகப்படியாக 20 முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும். 21வது முறை பேமெண்ட் செய்ய வேண்டுமெனில் அடுத்த நாள் வரையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இதேபோல் பிரபலமான யூபிஐ செயலிகளான பேடிஎம், கூகுள் பே, அமேசான் பே ஆகியவையும் ஒரு நாளுக்கு மொத்தமாக 10 பரிமாற்றம், 1 லட்சம் ரூபாய் என்ற லிமிட் வைத்துள்ளது. இதேபோல் கூகுள் பே 2000 ரூபாய்க்கு மேல் MONEY REQUEST அனுப்ப முடியாது என்ற கட்டுப்பாட்டை வைத்துள்ளது. அமேசான் பே புதிய வாடிக்கையாளர் முதல் 24 மணிநேரத்தில் அதிகப்படியாக 5000 ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டையும் வைத்துள்ளது.
RBI தரவுகள் படி இந்திய வங்கித்துறையில் 2022-23 ஆம் நிதியாண்டில் பதிவான மோசடிகள் அதாவது ப்ராடு சம்பவங்கள் எண்ணிக்கை 13,530 இந்த மோசடி மூலம் பாதிக்கப்பட்ட தொகையின் அளவு 30,252 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட தொகையின் அளவு பாதியாக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் அதிக மதிப்புடைய மோசடிகள் குறைக்கப்படும் அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications