UPI-இல் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் படி ஒரு குடும்பத்தில் உள்ள 5 உறுப்பினர்கள் வரை ஒரே கணக்கிலிருந்து பணம் அனுப்ப முடியும். ஒவ்வொரு நபரும் தங்கள் மொபைல் நம்பருடன் தங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டிய அவசியமில்லை. "UPI டெலிகேட்டட் பேமெண்ட் சிஸ்டம்" என அழைக்கப்படும் இந்த அம்சம், நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் மூலம் கொண்டுவரப்படவுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
UPI டெலிகேட்டட் பேமெண்ட் சிஸ்டம் என்றால் என்ன?: UPI டெலிகேட்டட் பேமெண்ட் சிஸ்டம் என்பது ஒரு கட்டண அம்சமாகும். இது முதன்மைப் பயனர் தனது UPI கணக்கை 5 குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இந்த அம்சம் முழு மற்றும் பகுதியளவு கட்டண விருப்பங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, பகிரப்பட்ட UPI கணக்கைப் பயன்படுத்தி பணம் செலுத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கலாம்.

எப்படி வேலை செய்கிறது?: கணக்கு வைத்திருக்கும் பிரைமரி யூசர் என்று சொல்லப்படுகிற முதன்மைப் பயனர். அதாவது யுபிஐ இவருடைய கணக்கு என்று கூட வைத்துக் கொள்ளலாம். கணக்கை வைத்திருக்கும் முதன்மைப் பயனர், செகண்டரி யூசர்களை சேர்த்து, அவர்களுக்கான செலவு வரம்புகளை அமைக்கலாம். முதன்மை பயனரின் விருப்பங்களைப் பொறுத்து இரண்டாம் நிலை பயனர்களுக்கு கட்டண அனுமதி வழங்கப்படலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு பயனரின் வங்கி கணக்கில் 50,000 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் 25,000 ரூபாய் செலவு செய்து கொள்ளவும் வரம்பு அமைக்கலாம் அல்லது முழு தொகையையும் பயன்படுத்தவும் வரம்பு அமைக்கலாம்.
முக்கிய விதிகள் என்ன?: இரண்டாம் நிலைப் பயனர்கள் பணம் செலுத்த, ஆப் பாஸ்வேர்ட் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும். முதன்மைப் பயனர் தனது கணக்கில் 5 இரண்டாம் நிலைப் பயனர்கள் வரை சேர்க்கலாம்.UPI டெலிகேட்டட் பேமெண்ட்-இன் மாதாந்திர செலவு வரம்பு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் உள்ள உறுப்பினர்கள் தினசரி வரம்பு ரூ. 5,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
முதன்மைப் பயனர் இரண்டாம் நிலைப் பயனர்களால் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க முடியும் மற்றும் தேவைப்பட்டால் பணம் செலுத்துவதை நிறுத்தவும் அனுமதியுள்ளது.
இந்த அம்சம் யுபிஐ பெமென்ட்களில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications