UPI என்று சொல்லப்படுகிற யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் QR கோடு மற்றும் UPI ஐடி மூலம் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஆனால், இதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்து என்னவென்றால், உங்கள் UPI ஐடி தெரிந்த மோசடிக்காரர்கள் உங்களிடம் பணம் கேட்டு மெசேஜ்களை அனுப்பலாம். இதுபோன்ற மெசேஜ்களை ஏற்று பணம் அனுப்பி விட்டால் மோசடிக்காரர்களின் அக்கவுண்டுக்கு உங்கள் பணம் சென்று விடும். அதேபோல இதை வைத்தே உங்களுடைய அக்கவுண்ட் விவரங்களையும் அவர்கள் தெரிந்து கொண்டு விடுவார்கள். எனவே உங்களிடம் பணம் கேட்டு அனுப்பப்படும் மெசேஜ்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இந்த மோசடி எவ்வாறு நடைபெறுகிறது?: இந்த மோசடி மிகவும் எளிமையான தந்திரத்தில் செயல்படுகிறது. முதலில் ஒரு பொய்யான கதையைக் கூறி நம்ப வைக்கப்படுவீர்கள் அல்லது திடீரென ஒரு அறிமுகமில்லாத நபரிடமிருந்து பணம் கேட்டு UPI ரெக்வஸ்ட் அனுப்பப்படலாம். அதை நீங்கள் அனுமதித்தால் மோசடிக்காரர்களுக்கு நீங்களே பணத்தை அனுப்புவது போல ஆகிவிடும்.

உண்மையான கோரிக்கைக்கும் மோசடியான கோரிக்கைக்கும் இடையே நீங்கள் வேறுபடுத்த முடியாமல் போவதே இதற்கு காரணம். அதுவும் ஆட்டோ பே கோரிக்கைகள் தானே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக கீழ்காணும் மெசேஜ்-ஐ பாருங்கள். இது நெட்ஃபிளிக்ஸ்-க்கான ஆட்டோ பே கோரிக்கையைக் கொண்ட போலி மெசேஜ். இது உங்கள் கணக்கிற்காக நெட்ஃபிளிக்ஸ் அனுப்பிய உண்மையான கோரிக்கையா? அல்லது மோசடிக்காரர்கள் அனுப்பிய கோரிக்கையா என்பதை உங்களால் சொல்ல முடிகிறதா? பார்ப்பதற்கு உண்மையான மெசேஜ் போலவே உள்ளது.
ஒருவேளை நீங்கள் இந்த ஆட்டோ பே கோரிக்கையை ஏற்றால் உங்களுடைய Netflix சந்தாவிற்கு பதிலாக மோசடிக்காரரின் Netflix சந்தாவிற்கு நீங்களே பணம் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அதன் பின் உங்கள் UPI ஐடி தெரிந்தால் மோசடிக்காரர்கள் உங்கள் பணத்தைத் திருட முயற்சி செய்யலாம்.

ஆட்டோ பே கோரிக்கை என்பது ஒரு வகையான UPI பரிமாற்றம் ஆகும். இதில், நீங்கள் ஒரு வியாபாரி அல்லது சேவை வழங்குநருக்கு முன்கூட்டியே அனுமதி அளித்து, குறிப்பிட்ட தொகையை உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்துக் கொள்ள வைக்க முடியும்.
எனவே எந்த ஒரு ஆட்டோ பே கோரிக்கையையும் அனுமதிப்பதற்கு பதிலாக ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும். இல்லையென்றால் தேவையில்லாத நிதி சிக்கலுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications