ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று இருமாத நாணய கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவுகளை அறிவித்த நிலையில், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் அறிவித்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தியாவே அதிகம் பயன்படுத்தும் பேமெண்ட் நெட்வொர்க் ஆக விளங்கும் யூபிஐ சேவையில் புதிய தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளது ஆர்பிஐ.
யூபிஐ மாற்றம் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசுகையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். குறிப்பாக அதிகப் பணப்புழக்கம் கொண்ட அதிக மதிப்பில் பணப் பரிமாற்றம் செய்யும் இடத்தில் என வகைப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவின் படி இனி மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பேமெண்ட் அளவு 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் கல்வி மற்றும் ஹெல்த்கேர் சேவைகளுக்கு அதிக அளவிலான தொகையை UPI வாயிலாகவே செலுத்த முடியும் எனத் தெரிவித்தார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
அதிகத் தொகை செலுத்துவதில் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இருக்கும் வேளையில், பெரும் பகுதிகள் மக்கள் இங்குப் பணமாகச் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. இதைத் தடுக்கும் முயற்சியை ஆர்பிஐ எடுத்துள்ளது, இதோடு கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் கணக்குகளை உறுதி செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் யூபிஐ மூலம் 5 லட்சம் வரையில் செலுத்தலாம்.
UPI சேவையை அனைத்து இடத்திலும் எவ்விதமான தடையும் இல்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாகப் பெரும் தொகையிலான டிஜிட்டல் பேமெண்ட் அனைத்தும் கிரெடிட் கார்டு வாயிலாகவே செலுத்தப்படும், தற்போது யூபிஐ சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் Large value retail digital transactions பிரிவில் கிரெடிட் கார்ட் ஆதிக்கத்தை உடைக்கும்.


Click it and Unblock the Notifications