பிரதமர் மோடியின் 2 நாள் பிரான்ஸ் பயணத்தில் ரபேல் விமானம், நீர்மூழ்கி கப்பல் வாங்கும் 90000 கோடி ரூபாய் டீல்-க்கு மத்தியில், பிரான்ஸ் நாட்டில் உலகமே வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் தொழில்நுட்பமான யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் யுபிஐ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அரசு அந்நாட்டில் UPI பேமெண்ட் சேவை அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்தியாவின் UPI தளத்தை பயன்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடாக இருக்கும். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி UPI பேமெண்ட் சேவையை பிரான்ஸ்-ல் அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

பிப்ரவரி மாதம் இந்தியாவின் UPI சேவை தளத்துடன் சிங்கப்பூரில் உள்ள PayNow எனப்படும் உடனடி பேமெண்ட் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டது மூலம் இருநாடுகள் மத்தியிலான பேமெண்ட் மிகவும் வேகமாக நடக்கிறது. இந்த நிலையில் UPI பேமெண்ட் சேவைக்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டால் சிங்கப்பூரைப் போலவே, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே எளிய மற்றும் வேகமாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
இந்தியா - பிரான்ஸ் மத்தியிலான வேகமாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்த, யுபிஐ உருவாக்கிய மத்திய அரசின் NPCI மற்றும் பிரான்ஸ் நாட்டின் LYRA-வும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. அஷ்வினி வைஷனவ் கடந்த வருடம் UPI தொடர்பாக இந்திய அரசு சுமார் 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்த 30 நாடுகளில் பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளதாகவும் அஷ்வினி வைஷனவ் கூறினார். இதேபோல் இந்தியாவின் ரூபே டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் விரைவில் பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கடந்த ஆண்டு அஷ்வினி வைஷனவ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் NPCI - LYRA கூட்டணியின் ஒரு வருட பணியை பாராட்டும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பிரான்ஸ் பயணத்தில் UPI பேமெண்ட் மற்றும் Rupay கார்டுகள் ஏற்றுக்கொள்ளும் முறை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கிய மைல்கல் ஆக மாறும்.
இந்த இமைப்பு மூலம் UPI மற்றும் Rupay கார்டுகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் பணம் செலுத்த லைரா நெட்வொர்க்ஸ் அனுமதிக்கும். இது இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பணம் பரிமாற்றத்தை எளிதாக்கும். தற்போது சிங்கப்பூர், பூடான் போன்ற நாடுகளில் இந்தியர்கள் ஏற்கனவே UPI சேவையை பயன்படுத்தி வருகின்றனர், அண்டை நாடான நேபாள அரசுடன் இதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது இந்தியா.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications