UPI: மக்களை கவலையை விடுங்க.. இந்த 5 விஷயம் இன்னுமும் இலவசம் தான்..!

எப்படி ஸ்மார்ட்போன், டிவி, பைக், கார் போன்றவை நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து உள்ளதோ, இதேபோல் யூபிஐ பேமெண்ட் முறையும் நாம் தினமும் பயன்படுத்தும் விஷயமாக மாறிவிட்டது. பெட்டி கடை முதல் நகை கடை வரை அனைத்து இடத்திலும் யூபிஐ பேமெண்ட் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், இதன் வளர்ச்சியை தடுப்பது போல் தற்போது MDR கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

NPCI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2000 ரூபாய் வரையிலான பேமெண்ட்-க்கு எவ்விதமான கட்டணமும் இல்லை, 2000 ரூபாய்க்கும் மேல் செய்யப்படும் யூபிஐ பேமெண்ட்க்கு 0.4 சகவீதம் MDR கட்டணம் அக்டோபர் 15ஆம் தேதி முதல் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

UPI: மக்களை கவலையை விடுங்க.. இந்த 5 விஷயம் இன்னுமும் இலவசம் தான்..!

ஆனால் சாமானிய மக்களையும், வர்த்தகர்களையும் பாதிக்காத வகையில் பல சலுகைகள் கொடுக்கப்பட்டு, பல சேவைகள் தொடர்ந்து இலவசமாகவே கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 5 விஷயங்கள் யூபிஐ சேவை தளத்தில் தொடர்ந்து இலவசமாக இருக்கப்போகிறது.

1. தனிநபர் மத்தியிலான பண பரிமாற்றத்திற்கு எவ்விதமான கட்டணமும் விதிக்கப்படுவது இல்லை. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள கட்டணம் அனைத்தும் தனிநபர் - வர்த்தகர்கள் அடிப்படையிலான பேமெண்ட்டுக்கு மட்டுமே. தொடர்ந்து 1 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை 24 மணிநேரத்திற்குள் பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும்.

2. ஒருவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு அதாவது தனிநபர் கணக்காக இருந்தாலும் சரி, வர்த்தக கணக்காக இருந்தாலும் சரி.. பணத்தை பெறுவதற்கு எவ்விதமான கட்டணமும் இல்லை.

3. ஒரு தனிநபர் தங்களுடைய யுபிஐ கணக்கில் இருந்து கடைகளில், வர்த்தகர்களுக்கு 1999 ரூபாய் வரையில் பணத்தை அனுப்பும் போது முற்றிலும் இலவசம். இதை ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்துக்கொள்ள முடியும்.

4. சிறு வியாபாரிகள் தங்களுடைய யுபிஐ கணக்கில் மாதம் 1 லட்சம் ரூபாய்க்குள் பனத்தை பெற்றால், பெற்ற தொகை 4000,5000 ரூபாயாக இருந்தாலும் சரி, மாதம் முழுவதும் 1 லட்சம் ரூபாய்க்கு குறைவாக பெற்று இருந்தால் அவர்களுக்கு MDR கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை மூலம் பெட்டி கடைக்காரர்கள், தெருவோர வியாராகிள் போன்றோர் பலன் அடைவார்கள்.

5. வழக்கம் போல் மாதத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏடிஎம் போல எவ்விதமான எண்ணிக்கை கட்டுப்பாடும் விதிக்கப்படுவது இல்லை.

யுபிஐ ADR கட்டணம் மூலம் யாருக்கு அதிக லாபம்?

விஜய்குமார் என்பவர் கடையில் 10000 ரூபாய்க்கு UPI மூலம் பணம் செலுத்துகிறார் எனில், இதற்கு MDR கட்டணமாக 40 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த 40 ரூபாயில் 16 ரூபாய் அதாவது 40% தொகை விக்னேஷ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் Issuing Bank-க்கு செல்லும். அடுத்தாக 12 ரூபாய் அதாவது 40 ரூபாய் கட்டணத்தில் 30% தொகை கடைக்காரர் கணக்கு வைத்திருக்கும் Acquiring Bank-க்கு செல்லும்

மீதமுள்ள தொகையில் 8 ரூபாய் அதாவது 20% தொகை UPI செயலியை இயக்கும் போன்பே, கூகுள்பே, பேடிஎம், BHIM செயலிக்கு செல்லும்.

இறுதியாக 40 ரூபாய் MDR கட்டணத்தில் மீதமுள்ள 4 ரூபாய் அதாவது 10% தொகை, அந்த UPI செயலியுடன் இணைந்து செயல்படும் Payer PSP Bank-க்கு வழங்கப்படும். Payer PSP Bank என்பது போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் ஆப்-களுக்கு உதவி செய்யும் வங்கிகளாகும்.

இதேவேளையில் வாடிக்கையாளர்கள் இந்த MDR கட்டணத்தை தவிர்க்க 10000 ரூபாயை 6 முறையாக செலுத்தவும் வாய்ப்புள்ளது.

MDR கட்டணம் மூலம் அதிகம் லாபம் சம்பாதிப்பது இந்திய வங்கிகளாக இருந்தாலும், தனியார் துறையில் இருக்கும் பேடிஎம், கூகுள், போன்பே ஆகிய நிறுவனங்கள் கூடுதல் வருமானத்தை பெறும். இதன் காரணமாக பேடிஎம் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 7 சதவீதம் அதிகரித்து 1,856.50 ரூபாயாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+