இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் தளத்தை மொத்தமாகப் புரட்டிப்போட்ட இந்திய அரசின் UPI சேவை தற்போது வெளிநாடுகளிலும் பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யூபிஐ சேவை தளம் இன்னும் இந்தியாவின் கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளில் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையை அடியோடு மாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் NPCI அமைப்பு யூபிஐ லைட் என்ற புதிய சேவை தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கான கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளை வெளியிட்ட சில வாரத்தில் NPCI யூபிஐ லைட் என்ற புதிய ஆப்லைன் பேமெண்ட் சேவை தளத்தைச் சோதனை செய்யத் துவங்கியுள்ளது.
யூபிஐ லைட் தளம்
BHIM, கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யூபிஐ செயலிகளைப் போலவே இந்த யூபிஐ லைட் தளம் இண்டர்நெட் இல்லாமல் இயங்க கூடியவை என்பது தான் இப்புதிய தளத்தின் சிறப்பு.
NPCI அமைப்பு
ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள இப்புதிய ஆப்லைன் பேமெண்ட் ப்ரேம்வொர்க் படி NPCI உருவாக்கப்பட்டு உள்ள யூபிஐ லைட் தளத்தில் அதிகப்படியாக ஒரு பேமெண்ட்-க்கு 200 ரூபாயும், மொத்தமாக 2000 ரூபாய் வரையில் பேமெண்ட் செய்ய முடியும். இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு எவ்விதமான இண்டர்நெட் மற்றும் டெலிகாம் இணைப்பும் தேவையில்லை.
ஒடிபி தேவையில்லை
இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு additional factor of authentication (AFA) தேவையில்லை அதாவது ஒடிபி போன்ற எதுவும் தேவையில்லை. இது யாருக்கெல்லாம் அதிகளவில் பயன் தரும் தெரியுமா..?
ஆப்லைன் பேமெண்ட் முறை
இத்தகையை ஆப்லைன் பேமெண்ட் முறை இண்டர்நெட் இல்லாத, டெலிகாம் சேவை தரம் குறைவாக உள்ள அனைத்து இந்திய கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் மத்தியில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை கொண்டு செல்ல சிறப்பான கருவியாக உள்ளது.
உலக வங்கி அறிவிப்பு
உலக வங்கி தரவுகள் இந்தியாவில் இன்னும் 59 சதவீத மக்களுக்கு இண்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை, 17 சதவீத மக்களுக்குச் செல்போன் இணைப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 2021ல் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் இன்னும் 25,000 கிராமங்கள் மொபைல் மற்றும் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கிராமங்கள்
குறிப்பாக ஒடிஷா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருக்கும் அதிகப்படியான கிராமங்களில் இன்னும் இண்டர்நெட் மற்றும் டெலிகாம் சேவைகள் இல்லாமல் இருக்கும் இந்த வேளையில் ஆப்லைன் பேமெண்ட் சேவை அளிக்கும் யூபிஐ லைட் போன்ற புதிய தளம் இந்தியாவின் பேமெண்ட் சந்தையின் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications