சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், UPI லைட் (UPI Lite) அமைப்பிற்கு புதிய அப்டேட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம், UPI லைட் பயன்படுத்துபவர்கள் தங்களின் வங்கி கணக்குகளில் இருந்து கூடுதல் அனுமதி எதுவும் இல்லாமல், யுபிஐ லைட் கணக்கில் பணம் தீர்ந்தவுடன் தானாகவே பணம் நிரப்பிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் சமீப காலமாக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு வித்திடும் வகையில் ஆர்பிஐ சமீபத்தில் யுபிஐ லைட் என்ற டிஜிட்டல் கட்டண முறையை அறிமுகம் செய்தது. மற்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்களைப் போல அல்லாமல் நீங்கள் இணைய வசதி இல்லாமலும் குறிப்பிட்ட அளவு பணத்தை இதன் மூலம் டிஜிட்டல் முறையில் அனுப்ப முடியும். இந்த யுபிஐ லைட் ஆப்பில் ரூ. 2000 ரூபாய் வரை வாலட்டில் சேமித்து வைக்க முடியும். இதில் தான் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு UPI வாலட்டில் நாம் பணத்தை சேமித்து வைக்கும் வசதி இருந்தது. தற்போது இதில் பணம் குறைந்தால் தானாகவே வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தானாக மீண்டும் பணத்தை நிரப்பும் வசதி: இந்த ஆட்டோமேட்டிக் அம்சம் பயனரால் வரையறுக்கப்பட்ட வரம்பிற்குக் கீழே UPI லைட் வாலட் இருப்பு குறையும் போது தானாகவே பணத்தை நிரபிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு முறையும் UPI லைட் வாலட் இருப்பு குறைவாக இருக்கும்போது, பயனர்கள் தங்கள் பணத்தை வாலட்டுக்கு மாற்ற வேண்டியதில்லை. இந்த நடவடிக்கை, மேலும் பணமில்லா சமூகத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2022ஆம் ஆண்டு இந்த யுபிஐ லைட் தொடங்கப்பட்டது. இதன் மூலம் விரைவாகவும், சிக்கல்கள் இல்லாமலும் சிறிய தொகை பரிவர்த்தனைகளை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. யுபிஐ லைட், குறிப்பாக ரூ.500 க்கும் குறைவான பரிவர்த்தனைகளை எளிதாக கையாள அனுமதிக்கிறது. யுபிஐ லைட், மொபைல் போன்களில் உள்ள NPCI காமன் லைப்ரரி (CL) பயன்பாட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் செயல்முறைகளை செயல்படுத்துகிறது.
இப்போது வரை, யுபிஐ லைட் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளைக்கு ரூ.2,000 வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம். மேலும் ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புகள், மளிகைப் பொருட்கள், பொது போக்குவரத்து அல்லது சிறிய அளவிலான சில்லறை விற்பனை போன்ற அன்றாட பரிவர்த்தனைகளை நிர்வகிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பரிவர்த்தனைகளில் வேகம் மற்றும் வசதி ஆகியவை மிகவும் முக்கியம்.

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல பயனர்கள் இந்த அம்சத்தில் வசதியாக இல்லாமல் இருக்கலாம் மற்றும் தனியுரிமைச் சிக்கல்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இந்த விருப்பத்திற்கு வங்கிகளில் இருந்து வாலட்களுக்கு தானாக பணம் நிரப்புவதற்கு ஒருவரின் ஒப்புதல் தேவையில்லை. பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதை முடக்குவதற்கான விருப்பம் உள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications