இந்திய ரிசர்வ் வங்கி (RBI) யுபிஐ லைட் சேவையின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக ஒரு முக்கியமான நடவடிக்கையை இன்று எடுத்துள்ளது. ஆர்பிஐ-க்கு அடுத்த கவர்னர் யார் என்று தெரியாமல் பொருளாதார சந்தை விழித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இன்று இரு மாத நாணய கொள்கை கூட்டம் துவங்கியது.
இதற்கு மத்தியில் இன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுபிஐ லைட் சேவைக்கான பரிவர்த்தனை வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,000 ஆகவும், மொத்த தினசரி வரம்பு ரூ.5,000 ஆகவும் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மூலம் ஒருவர் பாஸ்வோர்டு இல்லாமலேயே ஒரு நாளுக்கு 5000 ரூபாய் வரையில் யுபிஐ லைட் மூலம் பணம் செலுத்த முடியும்.

முன்பு யுபிஐ லைட் சேவைக்கான பரிவர்த்தனை வரம்பு அதிகப்படியாக 500 ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில் இதை 1000 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, யுபிஐ லைட் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தங்கள் டிஜிட்டல் வேலெட் இருப்பை மேனுவலாக மீண்டும் ரீசார்ஜ் வேண்டியிருந்தது. இந்த செயல்முறையை எளிதாக்க, தேசிய பணம் செலுத்துதல் கழகம் (NPCI) ஆட்டோமேட்டெட் டாப்-அப் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. யுபிஐ லைட் சேவையை பயன்படுத்தும் பயனர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச வரம்புக்கு கீழே வேலெட் பேலென்ஸ் செல்லும் போது, யுபிஐ லைட் இருப்பு தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட தொகையால் மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும்.
யுபிஐ லைட் சிறிய மதிப்புடைய பரிவர்த்தனைகளை செய்ய வசதியான மற்றும் பாதுகாப்பான வழியை வழங்கினாலும், யுபிஐ பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த அளவு நவம்பரில் 7% குறைந்து 15.48 பில்லியனாகவும், மொத்த பரிவர்த்தனை மதிப்பு 8% குறைந்து ரூ.21.55 லட்சம் கோடியாகவும் குறைந்துள்ளது. இந்த சரிவு பண்டிகை காலத்திற்குப் பிந்தைய மந்தநிலையால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தற்காலிக வீழ்ச்சி என்றாலும், இந்த சரிவு கவனிக்க வேண்டிய ஒன்றாக தற்போது மாறியுள்ளது. அக்டோபர் மாதம் 16.58 பில்லியன் யுபிஐ பரிமாற்றங்களும், இதன் மூலம் 23.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுதான் 2016ல் இருந்து அதிகப்படியாக செய்யப்பட்ட பண பரிமாற்ற எண்ணிக்கை.


Click it and Unblock the Notifications