UPI தளங்களில் 30 சதவீத சந்தைப் பங்கீட்டு உச்சவரம்பு விதிக்கப்படும் என்ற முன்மொழிவு நடைமுறைக்கு வராது என்று தொழில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் காலக்கெடுவுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. UPI சந்தையைப் பொறுத்தவரை, போன் பே மற்றும் கூகுள் பே போன்ற நிறுவனங்களின் சந்தை மூலதனம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே அவை UPI சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
UPI சந்தையில் புதிதாக நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பெரிய அளவிலான முதலீடுகளை தற்போது நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு காரணம், அரசு கொண்டுவரவிருக்கும் சந்தைப் பங்கு உச்சவரம்பு விதிமுறை குறித்த தெளிவு இல்லாததே.

தற்போது, UPI சந்தையில் போன் பே மற்றும் கூகுள் பே ஆகிய இரண்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அரசு இன்னமும் 30 சதவீத சந்தை பங்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
முன்பே கூறப்பட்ட படி கூகுள் பே மற்றும் போன் பே செயலிகள் தற்போது அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த இரண்டு யுபிஐ தளங்களுக்குமான பயனர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால் யுபிஐ சந்தையில் பிற புதிய நிறுவனங்கள் எதுவும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அரசு கருதுகிறது. இதனால் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 30 சதவீத சந்தை பங்கீடு உச்சவரம்பை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வளர்ந்து வரும் UPI நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் "சந்தை பங்கீடு உச்சவரம்பு விதிமுறை நடைமுறைக்கு வராது என்று பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதற்காக நாங்கள் சில திட்டங்களை வகுத்து வருகிறோம். மேலும் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில்.. புதிய நிறுவனங்களின் நிலைமை மாறாது. இது சரியான நடைமுறை இல்லை என்றாலும் அதுதான் உண்மை நிலவரம்.
கடந்த மே மாதத்தில் மட்டும் 14 மில்லியன் பரிவர்த்தனைகள் UPI தளத்தின் மூலம் நடந்துள்ளன. இது அரசாங்கத்திற்கும் NPCI-க்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. பயனர்களும் இந்த 2 தளங்களை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் புதிதாக UPI தளங்களை அறிமுகப்படுத்தும் எந்த ஒரு நிறுவனங்களாலும் மாற்றத்தை செய்ய முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
ஜூலை மாதத்தில் மொத்தம் 14.4 பில்லியன் மொத்த UPI பரிவர்த்தனைகளில், வால்மார்ட்டின் போன் பே மற்றும் கூகுள் பே ஆகிய இரண்டு நிறுவனங்களே 85 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன.
இதில் போன் பே மூலம் 6.9 பில்லியன் பரிவர்த்தனைககளும், கூகுள் பே மூலம் 5.3 பில்லியன் பரிவர்த்தனைகளும் நடந்துள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ள பேடிஎம் மூலம் 1.1 பில்லியன் பரிவர்த்தனைகளும், நான்காவது இடத்தில் உள்ள Cred மூலம் 142 மில்லியன் பரிவர்த்தனைகளும் நடந்துள்ளன.


Click it and Unblock the Notifications