UPI: 300 ரூபாய் கட்டணம்.. யாருக்கு இந்த பணம் போகிறது..? மக்களுக்கு தான் அதிக சேதம்.. எப்படி?

யூபிஐ பேமெண்ட் சேவை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வேளையில், இலவசமாக இருக்கும் இச்சேவைக்கு வருகிற அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு அதிகமாக நடைபெறும் வணிகப் பண பரிமாற்றத்திற்கு 0.4% MDR கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அதாவது 10000 ரூபாய் ஒரு ஷாப்பிங் மாலில் செலவு செய்தால் இதற்கு 40 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

UPI: 300 ரூபாய் கட்டணம்.. யாருக்கு இந்த பணம் போகிறது..? மக்களுக்கு தான் அதிக சேதம்.. எப்படி?

இந்த 40 ரூபாய் பணம் யாருக்கு செல்கிறது தெரியுமா..?

விக்னேஷ் என்பவர் கடையில் 10000 ரூபாய்க்கு UPI மூலம் பணம் செலுத்தினால், MDR கட்டணமாக 40 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த 40 ரூபாயில் 16 ரூபாய் அதாவது 40% தொகை விக்னேஷ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் Issuing Bank-க்கு செல்லும். அடுத்தாக 12 ரூபாய் அதாவது 40 ரூபாய் கட்டணத்தில் 30% தொகை கடைக்காரர் கணக்கு வைத்திருக்கும் Acquiring Bank-க்கு செல்லும்.

Also Read

மீதமுள்ள தொகையில் 8 ரூபாய் அதாவது 20% தொகை UPI செயலியை இயக்கும் போன்பே, கூகுள்பே, பேடிஎம், BHIM செயலிக்கு செல்லும்.

இறுதியாக 40 ரூபாய் MDR கட்டணத்தில் மீதமுள்ள 4 ரூபாய் அதாவது 10% தொகை, அந்த UPI செயலியுடன் இணைந்து செயல்படும் Payer PSP Bank-க்கு வழங்கப்படும். Payer PSP Bank என்பது போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் ஆப்-களுக்கு உதவி செய்யும் வங்கிகளாகும்.

UPI என்பது நாம் ஸ்மார்ட்போனில் பாஸ்வார்டு போட்டால் உடனே சென்றுவிடும். ஆனால் இந்த பேமெண்ட் ப்ராசஸ் செய்ய ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு நிறுவன்ம பங்கு வகிக்கிறது. போன்பே, கூகுள்பே, பேடிஎம் செயலிகள் வங்கிகள் அல்ல வெறும் பேமெண்ட் தளம் என்பதால் பணத்தை அனுப்புவோருக்கு பெருவோருக்கு மத்தியில் நடக்கும் செயல்பாட்டை முடிக்க ஒரு வங்கியின் உதவி இந்த நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது.

Recommended For You

மக்களுக்கு தான் பாதிப்பு..

இந்த MDR கட்டணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்க கூடாது என NPCI அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்தாலும், நடைமுறையில் இது சாத்தியமில்லை.

காரணம், எம்டிஆர் கட்டணம் மூலம் வரும் இந்த கூடுதல் செலவுகளை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது அல்லது கடைக்காரர்கள் பழையப்படி யூபிஐ பேமெண்ட்களை வாங்குவதை தவிர்த்துவிட்டு மீண்டும் ரொக்கமாக பணத்தை செலுத்த வாடிக்கையாளர்களிடம் கோரலாம். இது இரண்டுமே யூபிஐ வளர்ச்சிக்கு பாதிப்பு.

எப்படி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்யும் போது சில கடைக்காரர்கள் கூடுதல் கட்டணத்தை கேட்கிறார்களோ அதேபோல் எம்டிஆர் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் இருந்த வசூலிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த புதிய MDR விதிகள் படி சிறு வணிகர்களுக்கு முக்கியமான விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு வணிகர் மாதத்திற்கு UPI மூலம் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பெற்றால், அவருக்கு MDR கட்டணம் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மாதாந்திர வசூல் 1 லட்சம் லிமிட்டை தாண்டும் போது MDR கட்டணம் வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+