இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகளில் முக்கியமான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR - Merchant Discount Rate) கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி 2,000 ரூபாய்க்கு மேல் உள்ள குறிப்பிட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை MDR கட்டணம் வசூலிக்கப்படும்.
எம்டிஆர் கட்டண விவகாரத்தில் பொதுமக்களாகிய நாம் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை. வழக்கமான தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு (P2P) இது பொருந்தாது. மேலும், வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்காது; இது வணிகர்கள் மற்றும் பேமெண்ட் அமைப்புகளை சார்ந்தது என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் OTT சந்தாக்கள், மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் AutoPay மூலமாக செய்யப்படும் மாதாந்திர கட்டணங்களுக்கு எம்டிஆர் கட்டணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களின் மாதாந்திர கட்டணங்களை செலுத்தவும், மின்சாரம், போன் பில்கள் போன்றவற்றுக்கும் UPI AutoPay / UPI Mandate முறையை பயன்படுத்துகிறோம்.
ஒவ்வொரு மாதமும் இந்த கட்டணங்கள் தானாகவே யூபிஐ-இல் இருந்து எடுத்து கொள்ளப்படும். இந்நிலையில் தான் இந்த கட்டணங்கள் 2,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா? என பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இதற்கு ஓடிடி சந்தாக்கள் மற்றும் இதர மாதாந்திர கட்டணங்களுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வராது என அரசு விளக்கம் தந்துள்ளது. UPI Auto Pay மற்றும் Recurring Mandates ஆகியவற்றுக்கு புதிய MDR கட்டமைப்பு வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் மாதாந்திர ஓடிடி கட்டணம் 2,000 ரூபாயை தாண்டினாலும், உங்களிடமிருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
அதே போல மியூச்சுவல் ஃபண்ட் எஸ்பிஐ மற்றும் இதர தொடர் முதலீடுகள் UPI Mandate அல்லது AutoPay மூலம் தானாக பிடிக்கப்பட்டால், அவற்றுக்கு புதிய MDR கட்டணம் விதிக்கப்படாது. வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி தங்கள் SIP-களை தொடரலாம்.
அதே வேளையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், ஸ்டாக் பிரேக்கர்கள் மற்றும் செபியில் பதிவுபெற்ற மூலதன சந்தை நிறுவனங்களுக்கான One-time யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு பிரத்யேகமான சலுகை கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மூலதன சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.02% என்ற குறைந்த அளவிலான MDR கட்டணம் பொருந்தும். இதுவும் அதிகபட்சமாக 300 ரூபாய் வரை மட்டுமே பிடிக்கப்படும். உதாரணமாக 1 லட்சத்திற்கு பரிவர்த்தனை செய்தால் வெறும் 20 ரூபாய் மட்டுமே MDR வரும். இது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்படாது என அரசு கூறியுள்ளது.
ஆனால், UPI AutoPay அல்லது Mandate முறையில் நடக்கும் SIP, ஓடிடி சந்தாக்கள் மற்றும் மாதாந்திர கட்டணங்களுக்கு இந்த புதிய MDR கட்டணம் பொருந்தாது . எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது மாதாந்திர ஆட்டோமேட்டிக் பேமெண்ட்கள் மற்றும் முதலீடுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.


Click it and Unblock the Notifications


