இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிமாற்ற அமைப்பான யூபிஐ சேவையில் அக்டோபர் 1, 2025 முதல் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது. தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ), தனிநபர்களுக்கிடையேயான பண கோரிக்கை (money request) சேவையை நீக்குகிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் அதிகரித்து வரும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை பல இடத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தாலும் தற்போதைய மோசடிகளை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகளை எடுக்கப்பட்டு உள்ளது.

யூபிஐ சேவை மக்களின் பண பரிவர்த்தனை முறையில் பெரும் மாற்றம் செய்து எளிதாக்கியுள்ளது. இந்த நிலையில் பண கோரிக்கை சேவையை ரத்து செய்தது பலருக்கும் நெருடலாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
உதாரணமாக உணவகத்தில் நண்பர்கள் அனைவரும் சாப்பிட சென்றால் ஒருவர் மட்டும் பில்லை செலுத்தி விட்டு பின்பு பிரித்துக்கொள்ளப்படும். ஆனால் இந்த பணத்தை கேட்பதிலும், திரும்ப பெறுவதில் இருக்கும் போராட்டம் ஒவ்வொருக்கும் தெரியும். இப்படி பல இடத்தில் பணத்தை பகிர்ந்து செலவு செய்யும் போது ஒருவர் மற்றொருவரிடம் எவ்வளவு தொகையை பெற வேண்டுமோ அதை மணி ரெக்வட்ஸ் மூலம் பெற முடியும் அல்லது கொடுக்க வேண்டிய தொகையை மணி ரெக்வஸ்ட் மூலம் நினைவூட்ட முடியும்.
இதை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஒருவரால் செய்ய முடியும் என்பதால் பல வகையில் உதவியாக இருந்தது. ஆனால் இதே விஷயத்தை பலர் தவறாக பயன்படுத்தி மோசடி செய்கின்றனர்.
போலியாக ஒருவருக்கு மணி ரெக்வஸ்ட் அனுப்பி, பயனர்களை ஏமாற்றி பணத்தை இழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. பலர், உண்மையான கோரிக்கை என நினைத்து அல்லது பலர் என்னவென்றே தெரியாமல் கிளிக் செய்து யூபிஐ பாஸ்வோர்டு கொடுத்து விடுகின்றனர். இதனால் பணத்தை இழக்கும் அபாயம் உருவாகிறது. இதனால், என்பிசிஐ இந்த சேவையை நீக்க முடிவு செய்தது.
என்பிசிஐ அமைப்பு இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கிகள், பேமெண்ட் சேவை வழங்குநர்கள் மற்றும் யூபிஐ ஆப்-களுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் அக்டோபர் 2 முதல், தனிநபர்களுக்கிடையேயான பண கோரிக்கை தொடங்கவோ, அனுப்பவோ அல்லது செயல்படுத்தவோ கூடாது என கண்டிப்பான எச்சரிக்கையுடன் இந்த உத்தரவு செயல்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த மாற்றம் தனிநபர்களுக்கிடையேயான மணி ரெக்வஸ்ட்-களுக்கு மட்டுமே பொருந்தும். வியாபாரிகளுக்கான பேமென்ச் ரெக்வஸ்ட்-ல் எவ்விதமான மாற்றமும் இருக்காது, தொடர்ந்து இச்சேவை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம், மக்களை பாதுகாக்கும் அதேவேளையில், யூபிஐயின் அடிப்படை வசதிகளை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. மோசடிகள் தடுப்பதால், டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மேலும் பாதுகாப்பானதாக மாறும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications