இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வரும் வேளையில், பலரும் ஏடிஎம்-யில் இருந்து பணத்தை எடுப்பதையே மறந்துவிட்டனர். மோடி அரசு கூறிய பணமில்லா பொருளாதாரம் மெல்ல மெல்ல உண்மையாகி வருகிறது, ஆனால் இதை பணமதிப்பிழப்பு செய்யாமலே செய்திருக்க முடியும் என்பது முக்கியமான விஷயம்.
யூபிஐ பல வகையில் மக்களும், அரசுக்கும் பலன் அளித்து வரும் வேளையில் இப்பிரிவில் அடுத்தடுத்து பல சேவைகளை அளித்து வரும் காரணத்தால் பல்வேறு நிதி சேவைகள் எளிதாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இருக்கும் NPCI அமைப்பு ஏற்கனவே யூபிஐ, யூபிஐ லைட் என்ற இரு சேவைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு யூபிஐ கடன், யூபிஐ லைட் எக்ஸ், டேப் அண்ட் பே, ஹலோ யூபிஐ, பில்பே கனெக்ட் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு வியப்பு அளிப்பதும், பலன் அளிக்கும் சேவையாக விளங்குவது Credit Line on UPI என்பது.
Credit Line on UPI சேவை என்றால் என்ன..? இதனால் மக்களுக்கு என்ன லாபம்..? இந்தியாவில் அனைவருக்கும் முழுமையான நிதிசேவைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்காக கொண்டு உள்ளது. இதை சாத்தியப்படுத்த அனைத்து சேவைகளும், நிதியியல் வாய்ப்புகளையும் மக்கள் கைகளில் நேரடியாக கொண்டு சேர்க்கும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பயணத்தில் முக்கியமான விஷயம் தான் இந்த Credit Line on UPI சேவை. இச்சேவை கீழ் ஒரு வங்கி யூபிஐ வாடிக்கையாளர்களுக்கு யூபிஐ ஆப் வாயிலாகவே கடன் சேவை ப்ரீ அப்ரூவ் முறையில் வழங்கப்படும். தற்போது வங்கிகள் எப்படி தனது வாடிக்கையாளர்களின் மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங் வாயிலாக கடன் அளிக்கிறதோ அதேபோல இனி யூபிஐ ஆப் வாயிலாக கடன் பெறலாம்.
இந்த ப்ரீ அப்ரூவ்டு கடன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் இந்த கடன் மூலம் பேமெண்ட் செய்து பொருட்களையும், சேவைகளையும் பெற முடியும். இது இந்திய நிதியியல் சேவை பிரிவில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications