ஒருவரது செல்போன் நம்பரை உள்ளீடு செய்து அவரது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பலாம் என ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூறி இருந்தால் நம்பி இருப்பீர்களா?.. அப்படி ஒன்றை சாத்தியப்படுத்தியது தான் யுபிஐ.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புரட்சிக்கு வித்திட்ட ஒரு அமைப்பு தான் யுபிஐ எனப்படும் யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ். சிறு வியாபாரத்தில் தொடங்கி, தனிநபர்களுக்கு இடையிலான பண பரிமாற்றம், பெரிய பெரிய கடைகளில் பொருட்களுக்கு பணம் செலுத்துவது என அனைத்தையும் எளிதாக்கிவிட்டது யுபிஐ.

இந்தியாவில் யுபிஐ சேவையானது பீம் செயலி மற்றும் கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இனி இந்த யுபிஐ சேவையை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இந்தியாவின் யுபிஐ சேவைகள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் யுபிஐ சேவையை உலகமயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலும் இந்தியர்கள் எளிமையாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் யுபிஐ சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு தான் யுபிஐ சேவைகளை பராமரித்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கேயும் யுபிஐ சேவைகளை பயன்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதன்முறையாக இந்தியாவின் யு பி ஐ சேவைகளை பயன்படுத்த அனுமதித்த நாடு பூடான் ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டு முதல், பூட்டானில் யுபிஐ சேவை பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பூடான், சிங்கப்பூர் , நேபாளம், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ,இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் எல்லாம் நாம் இந்தியாவில் பயன்படுத்துவதைப் போலவே யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்.
பிரான்ஸை பொறுத்தவரை ஐரோப்பிய பிராந்தியத்திலேயே முதன்முறையாக இந்தியாவின் யு பி ஐ சேவைகளை ஏற்றுக்கொண்ட நாடு பிரான்ஸ் ஆகும். பிரான்ஸில் சுற்றுலாத்தலங்களில் குறிப்பாக ஈபில் டவரை காண செல்ல யுபிஐ வழியே கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் முதன்முறையில் இந்தியாவின் யுபிஐ சேவையை ஏற்றுக் கொண்ட நாடு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications