டெல்லி: 2024 ஆம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு தொடங்கி இருக்கிறது. இந்த 12 மாத காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த சில முக்கியமான பொருளாதார நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பொருளாதாரம்: சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா 2024யிலும் தக்க வைத்துக் கொண்டது. வலுவான உற்பத்தி, உள்நாட்டு நுகர்வு மற்றும் சேவை துறையில் விரிவாக்கம் என 2024 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கும் இந்திய ஜிடிபிக்கும் வலுவான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.

அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகள் கடும் சரிவில் இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டில் அதில் இருந்து மீண்டு வந்தன. இது தவிர அதானி குழுமம் பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் உள்கட்டமைப்பு துறையிலும் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றது.
ரிலையன்ஸ் ஜியோ : முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டெலிகாம் சேவையை கொண்டு வந்தது. அதுமட்டுமின்றி சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் வளர்ந்து வரக்கூடிய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பெருமளவில் பங்களித்தது.
யுபிஐ பரிவர்த்தனை: இந்தியாவில் ஃபின்டெக் எனப்படும் நிதி சார்ந்த தொழில்நுட்பங்கள் 2024 ஆம் ஆண்டில் வேகமான வளர்ச்சி கண்டன. குறிப்பாக யுபிஐ பேமெண்ட்கள் மாதந்தோறும் 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் என்ற உச்சத்தை எட்டின.
ஐடி நிறுவனங்கள்: இந்தியாவின் தொழில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை தங்களுடைய செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு இணைத்து சர்வதேச அளவில் செயல்படும் டெக் நிறுவனங்களுக்கெல்லாம் மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்தன.
15 யூனிகார்ன் நிறுவனங்கள்: சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இந்தியாவில் ஃபின்டெக் மற்றும் அக்ரிடெக் பிரிவுகளில் 15 புதிய யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகின. அதாவது ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட 15 புதிய நிறுவனங்கள் உருவாகின.
இந்தியாவில் டெஸ்லா ஆலை: எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவுவதாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. நீண்ட காலமாக இந்தியர்கள் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய வாகனத்தை எப்பொழுது இந்தியாவில் விற்பனை செய்யும் என காத்திருந்த நிலையில். மத்திய அரசின் விதிகளுக்கு இணங்க டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உற்பத்தி ஆலையை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டது.
செமிகண்டக்டர்: வேதாந்த நிறுவனம் இந்தியாவின் செமி கண்டக்டர் துறையில் கால் பதித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சர்வதேச சிப் தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் சிப் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் வேதாந்தாவும் அதை கையில் எடுத்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்திய நிறுவனங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்த வகையில் சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் புதிய உச்சத்தை எட்டி இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை எட்ட உதவி வருகின்றன.
ஐபிஓ வெளியீடு: இந்திய பங்குச் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்து புதிய சாதனை படைத்தன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications